பூமியிம் நம் உடலின் நிலையும் அசைவும், பார்வைப்புலன், தொடு உணர்வு போன்ற பல்வேறு புலன் உறுப்புகளால் உணரப்படுகின்றன. காதின் மையப்புழை அமைப்பு உடல்நிலை மற்றும் உறுப்பு அசைவுகளின் உணர்வுகளை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்கிறது.
புலன் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் கிளர்ச்சி மிகும் போது, மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முன்னும் பின்னும் மூளையைச் சென்றடைவதால் உடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலை சுற்றும் மயக்கமும் உண்டாகிறது.
மிகவும் உயரமான மலைகளின் முகட்டில் நின்று கொண்டு கீழே தரையைப் பார்க்கும் போது பார்வைப் புலன்கள் மட்டும் தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. மற்ற புலன் உறுப்புகள் இதற்கேற்ப ஒத்திசைவான தகவல்களை மூளைக்கு அனுப்புவதில்லை. இதனால் மூளையில் குழப்பம் ஏற்பட்டு உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது.
பெருமூளைப் புறணியிலுள்ள சமநிலைக் கட்டுப்பாடு மையத்தினருகில், வாந்தி உணர்வைத் தோற்றுவிக்கும் மையம் உள்ளது. உடல் சமநிலை பாதிக்கும் போது இம்மையமும் கிளர்ச்சியுறுவதால் வாந்தி ஏற்படுகிறது. சிலருக்கு கப்பல், ஆகாய விமானப் பயணத்தின் போது தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்படுவதுண்டு.
No comments:
Post a Comment