நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை
No comments:
Post a Comment