பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை உறுதி செய்த அமெரிக்க அதிகாரிகள் அது தொடர்பான வேறு எந்த தகவல்களையும் வெளியிட மறுத்து விட்டனர்.
பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அமெரிக்கா முழுவதும் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது.
வெள்ளை மாளிகை உள்பட முக்கிய நகரங்களில் திரண்ட அமெரிக்க மக்கள் உற்சாகத்துடன் யு.எஸ்.ஏ. யு.எஸ்.ஏ. என்று கோஷமிட்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் அமெரிக்கர்கள் விழாக்கோலமாக உள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மிக முக்கிய போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்து உள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment