ஹங்கேரிய தேசியக்கவிஞன் பெட்டோவ்ஃபி தனது நாடு அந்நியர் ஆட்சிக்குட்பட்டு அவதியுற்ற காலத்தில் பேனா ஏந்திய தன் கையால் வாளேந்தவும் தயங்கவில்லை. 1849இல் நடைபெற்ற விடுதலைப்போரில் 26 வயதில் பகைவனின் ஈட்டிக்கு இரையானான். மகாகவி பாரதியாரின் கவிதைகளில் காணும் ஆவேசத்தையும் துடிப்பையும் ஒத்தவை அவனது கவிதைகள். மரபுவழி உவமை அணிமுறைகளில் விலகி, புது உத்தியில் தனது உள்ளக் குமுறல்களைக் கவிதையாக்கினான். அவை இன்று விடுதலை வேட்கைகொண்ட பல நாட்டினரதும் உள்ளக்கனலைத் தூண்டும் போர்க்கவிதைகளாக விளங்குகின்றன. அவ்வுலகக் கவிஞனின் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம் இந்நூல்.
No comments:
Post a Comment