Search This Blog

Pages

Monday, May 2, 2011

பின்லேடனின் உடல் ஆப்கன் கொண்டு செல்லப்படுகிறது

அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதி பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கொண்டாட்டம்: பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அமெரிக்கா முழுவதும் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது.
வெள்ளை மாளிகை உள்பட முக்கிய நகரங்களில் திரண்ட அமெரிக்க மக்கள் உற்சாகத்துடன் "யு.எஸ்.ஏ, யு.எஸ்.ஏ" என்று கோஷ மிட்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் அமெரிக்கர்கள் விழாக்கோலமாக உள்ளனர்.
பாகிஸ்தானில் அதிர்ச்சி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேடன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
அடுத்ததாக ஜவாஹரி: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து எகிப்தில் பிறந்த டொக்டரான அய்மன் அல் ஜவாஹரி அந்த அமைப்புக்கு பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்லேடன் மற்றும் அவரது அல் கொய்தா இயக்கத்தின் மூளையாகச் செயல்பட்டவர் ஜவாஹரி. அல் கொய்தாவின் வீடியோ செய்திகளில் அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தவர் ஜவாஹரி.
கடந்த மாதம் லிபியாவில் நேட்டோ படைகளையும், அமெரிக்கப் படைகளையும் எதிர்த்து போரிடுமாறு முஸ்லீம்களை அவர் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ.டி.இ புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கண்காணிப்பில் இது தெரியவந்தது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் 2001 இறுதியில் ஆப்கனில் தலிபான் அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்திய போது பின்லேடனும், ஜவாஹரியும் தந்திரமாக தப்பினர்.
தற்போது அமெரிக்கப் படைகளுடனான தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டு அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் ஜவாஹரியைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பின்லேடனைப் போலவே ஜவாஹரியும் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மறைந்திருப்பார் எனக் கருதப்பட்டு வந்தது. ஜவாஹரியும், பின்லேடனும் ஒன்றாக இருந்த வீடியோ கடைசியாக செப்டம்பர் 10 2003ல் அல் ஜஸீராவால் வெளியிடப்பட்டது. அதில் மலைப்பகுதிகளில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
ஜவாஹரியை அல் கொய்தாவின் தலைமை அமைப்பாளர் என்றும் பின் லேடனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment