சுமார் ஒருமீற்றர் உயரமான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியாகி பிராந்தியத்தில் கடலுக்கடியில் 25 மீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூகம்பத்தினால் தலைநகர் டோக்கியோவிலுள்ள கட்டிடங்களும் அதிர்ந்தன.
கடந்த மாதம் 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினாலும் அதைத் தொடர்ந்த சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே இன்றைய பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பூகம்பத்தையடுத்து புகுஷிமா தாய்ச்சி அணு உலையிலிருந்து ஊழியர்கள்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment