சூரியன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்க தொடங்குவதால்
இம்மாதம் முழுவதும், பகல்,இரவு நேரங்களின் கடுமையான வெப்ப நிலையை இலங்கை மக்கள் அனுபவிக்க நேரிடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள வெப்பநிலையை விட 5 முதல் 10 பாகைகளால் இவ்வருடம் வெப்பம் அதிகரிக்கலாம் எனவும் அதன் அறிக்கைகள் தெர்விக்கின்றன. இதனால் அதிகமான நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. சூரிய கதிர்வீச்சின் அதிகமான தாக்கம் நேரடியாக உடல் சருமத்தை தாக்குவதால் ஆரோக்கியமின்மை, இலகுவில் நோய்த்தொற்று என்பன ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தெ.மேற்கு பருவநிலை மாற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னரே, இவ்வாறு காலநிலை வெப்பம் மாற்றமடைவதாக, திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும்பாலும், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேற்கு மாகாணங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் என அத்தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2010 ம் ஆண்டு உலகின் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக சர்வதேச வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2001-2010 வரையிலான தசாப்தம் அதிக வெப்பம் மிகுந்த தசாப்தமாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில தசாப்த காலமாக, சுற்றுப்புறச்சூழல் கடுமையாக மாசடைந்துவருவதால் வருடாந்த
ம் உலக வெப்பநிலை உயர்வடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment