காலனித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புக்;குரலான இவ்வரசியல் கவிதை 2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவில் நடந்த விமானத் தற்கொலைத் தாக்குதல் ஏற்படுத்திய சர்வதேச அதிர்ச்சியின் கிளர்ச்சியாகவும் அமைந்துள்ளது. காலம் காலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளோடியிருந்த உலகின் கண்டனப் பார்வை இங்கு இலக்கிய வெளிப்பாடாகியுள்ளது. அதே வேளை இதே அமெரிக்காவே முற்போக்குச் சக்திகளின் உருவாக்கத்திற்கும் அவற்றின் போராட்டத்திற்கும் விளைநிலமாக இருந்திருக்கின்றது என்பதையும் மறக்க முடியாது. சமாந்தரமாக அத்தகைய போக்கும் இங்கே அவிழ்கின்றது. தினக்குரலில் தொடராக வெளிவந்த கவிதைத் தொடர் இது.
No comments:
Post a Comment