கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.
இன்னொன்றைப் பற்றி (1.32 MB)
No comments:
Post a Comment