Search This Blog

Pages

Thursday, April 28, 2011

அ. முத்துலிங்கம் கதைகள்

தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் 77 சிறுகதைகள் இப்பெருந்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை புலம்பெயர்ந்த நாடிழந்த ஒருவரின் கதைகள். இவரது ஆக்கங்களில் இவ்வேக்கம், தவிப்பு வெளிவருவதில்லை. ஆனால் அவரது சகல கதைகளினதும் அடிநாதமாக இந்த மனநிலை புதையுண்டு கிடக்கின்றது. புலம்பெயர்ந்து வாழ்வதால் எதிர்கொள்ளும் இழப்புக்களின் ஈடுகட்டலாக இவரது கதைகளில் மொழியின் மீதான இம் மீள்பயணம் நிகழ்கின்றது. யூதர்கள் இரண்டாயிரம் வருடம் தங்கள் நிலத்தை மொழியில் சுமந்துதான் உலகமெல்லாம் அலைந்தார்கள். மண்ணும் தேசமும் விதைவடிவில் இக்கதைகளில் கருக்கட்டியுள்ளன. யூதர்கள் தம் மொழியை நட்டுத் தம் தேசத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் உருவாக்கியது போல, முத்துலிங்கத்தின் கதைகளுக்குள் உலர்ந்து நீளுறக்கத்தில் மூழ்கிய விதைகள் ஒரு மழையில் முளைத்துக் காடாக மாறமுடியும்.

No comments:

Post a Comment