ஒரு பூவின் பருவத்தை பல்வேறு தமிழ்ப் பெயர்களில் குறிப்பிடுகின்றோம். கன்னி, நுகும்பு, அரும்பு, மொட்டு, முகை, போது, மலர், அல், வீ, என்பன அவை. வீ என்பது Pழடடரயெவநன கடழறநச. பூத்தன்மையை இழந்து சூலுற்று காய்த்தன்மையைப் பூடகமாக உள்வாங்கிய நிலை. எஸ்பொ தன் இலக்கியப் பயணத்திலும் அத்தன்மையைப் பெற்றுவிட்டதன் குறியீடாக இந்த முதற் சிறுகதைத் தொகுதிக்கு இத்தலைப்பினை இட்டுள்ளார். இந்நூலில் 1946ம் ஆண்டிலிருந்து எழுதப்பெற்ற சிறுகதைகளுள் தேர்ந்த 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கால்நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈழத்தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம். மித்ர வெளியீட்டகத்தின் முதல் வெளியீடு இதுவாகும்.
No comments:
Post a Comment