Search This Blog

Pages

Thursday, April 28, 2011

விலங்கிடப்பட்ட மானுடம்

இன்றைய ஈழத்துப்பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சம காலப் பிரச்சினைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப்படுத்தும் 20 கவிதைகளின் தொகுப்பு. பெண்(1983) என்ற கவிதை தவிர்ந்த அனைத்தும் 1990-95ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டவை. சுல்பிகா, சமூகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் சுமார் 10 ஆண்டுக்காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளொமா பட்டம் பெற்ற இவர் இலங்கை தேசிய கல்வி நிறவனத்தில் செயல்திட்ட அதிகாரியாக, கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றார்.

No comments:

Post a Comment