Search This Blog

Pages

Thursday, December 2, 2010

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 259 ரன்கள்


ஜெய்பூரில் நடைபெற்று வரும் இந்திய, நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்ரீசாந்த் அபாரமாக வீசி 9 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
46-வது ஓவரில் ஸ்ரீசாந்த் அபாய வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் விக்கெட்டையும், வெட்டோரி விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
துவக்கத்தில் ஜேமி ஹவ், வில்லியம்ஸன் ஆகியோர் ஆட்டமிழக்க நியூஸீலாந்து 16 ஓவர்களில் 64/2 என்று ஆனது.
அதன் பிறகு டெய்லரும், கப்திலும் இணைந்தனர் அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் ஆகியோர் சிக்கனமாக பந்து வீசினர். இதனால் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது.
8 ஓவர்களில் 32 ரன்களையே டெய்லர், கப்தில் ஆகியோரால் எடுக்க முடிந்தது. டெய்லர் 15 ரன்கள் எடுத்து நெருக்கடி தாங்க முடியாமல் பத்தான் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று கோலியிடம் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு கப்தில், ஸ்டைரிஸ் இடையே 12 ஒவர்களில் 65 ரன்கள் சேர்க்கப்பட்டது. பவர் பிளே 35-வது ஓவரில் எடுக்கப்பட்ட போது நியூஸீலாந்து 137/3 என்று இருந்தது.
ஆனால் கப்தில் 70 ரன்களில் அஷ்வினிடம் வீழ்ந்தார். இவர் 102 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார்.
ஆனால் பவர் பிளேயில் ஸ்டைரிஸ், வெட்டோரி ஜோடி ரன்குவிப்பை துரிதப்படுத்த 40-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 179ஆக உயர்ந்தது. அதாவது பவர் பிளேயில் 42 ரன்கள் எடுத்தனர் நியூஸீலாந்து வீரர்கள்
ஸ்காட் ஸ்டைரிஸ் சிறப்பான, சாதுரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வெட்டோரியும், ஸ்டைரிசும் இணைந்து 9 ஓவர்களில் 58 ரன்களைச் சேர்த்தனர்.
பிறகு கடைசி ஓவரில் ஸ்ரீசாந்த்தை கைல் மில்ஸ் வெளுத்தார். இதில் 12 ரன்களை ஒரு சிக்சருடன் மில்ஸ் அடிக்க கடைசி பந்தை சவிதீ 2 ரன்களுக்குத் திருப்பினார்.
நியூஸீலாந்து சவாலான 259 ரன்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
விளக்கு வெளிச்சத்தில் கடினம் என்று கூறப்படுகிறது. ஆனால் பனி விழத்துவங்கினால் நியூஸீலாந்து பந்து வீச்சாளர்கள் நிச்சயம் போராட வேண்டி வரும்.
யுவ்ராஜ் சிங் இன்று சோபிக்கவில்லை அவர் 48 ரன்களை விட்டுக் கொடுத்தார். நெஹ்ரா விக்கெட் இல்லாமல் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். யூசுப் பத்தான் 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக் கொடுத்து டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அஷ்வின் 10 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.


No comments:

Post a Comment