Search This Blog

Pages

Saturday, December 11, 2010

நியூசிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது இந்தியா


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா அபாரமாக வெற்றிக் கொண்டது. 5 ஒரு நாள் போட்டி தொடர்களை கொண்ட போட்டியில் இன்றைய இறுதி போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் 5-0 என்ற அடிப்படையில் தொடரை தனதாக்கி கொண்டது.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 27 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் அதிகூடுதல் ஓட்டங்களாக ஸ்ரயிர்ஸ் 24 ஓட்டங்களையும், ஹவ் 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்திய அணியின் பந்து இன்று அதிரடியாக காணப்பட்டது. அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், நேரா, யுவராஜ் மற்றும் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
104 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 21.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் கம்பீர் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும் தொடர்ந்த வீரர்களான பட்டேல் 56 ஓட்டங்களையும், யுவராஜ் 42 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றி பெற செய்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் மெக்கலம் மற்றும் விட்டோரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியதோடு, இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக யுவராஜ் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்டநாயகனாக கம்பீர் தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment