Search This Blog

Pages

Thursday, December 2, 2010

பேஸ்புக், இமெயில் யாருக்கு சொந்தம்?


ஒருவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சொத்து யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை உயில் அடையாளம் காட்டுகிறது.
டிஜிட்டல் மயமான உலகில் ஈமெயில், பேஸ்புக் உள்ளிட்ட டிஜிட்டல் தகவல்களை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் வந்து விட்டது டிஜிட்டல் உயில்.
ஈமெயில், சமூக இணையதளம், இன்டர்நெட் வழி பாங்கிங் என இன்டர்நெட் பயன்பாடு இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் போட்டோ ஆல்பம், பல்வேறு முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவற்றுக்குள் நுழைய பயன்பாட்டாளர் பெயர் மற்றும் ரகசிய குறியீடு அவசியமாகிறது.
இந்நிலையில் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அவருடைய டிஜிட்டல் தகவல்களுக்கான ரகசிய குறியீடை அறிய வாரிசுதாரர்கள் படாத பாடுபட வேண்டி உள்ளது. குறிப்பாக, இத்தகைய தகவல்களை பெற சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்கள் கெடுபிடி காட்டுகின்றன. எனவே, தங்கள் மறைவுக்குப் பிறகு தனது அசையும், அசையா சொத்துகள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை உயில் மூலம் எழுதி வைப்பது போல டிஜிட்டல் தகவல் தொடர்பாகவும் உயில் எழுதி வைக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பவன் துகல் கூறியதாவது: ஒருவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய டிஜிட்டல் தகவலை பெறுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுகின்றன. நீதிமன்றத்தில் இதற்கான அதிகார சான்றிதழ் பெறுவது மிகவும் கடினம். எனவே, இன்றைய சூழலில் டிஜிட்டல் உயில் மிகவும் அவசியமாகிறது.
முதலில் டிஜிட்டல் வழியில் என்னென்ன தகவல் உள்ளது என்பதை பட்டியல் இடுங்கள். தனது மறைவுக்கு பிறகு இந்த தகவலை பெறுவதற்கு யார் உரிமை கோரலாம் என்பதை குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். இந்தியர்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த ஏப்ரலில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் டிஜிட்டல் உயில் எழுதுவதற்கு உன் உதவியை நாடினார். அதன் பிறகு 6 பேர் அணுகினர். மேலும் பலர் இது தொடர்பாக தொடர்பு கொண்டு வருகின்றனர்  இவ்வாறு பவன் துகல் தெரிவித்தார்.


No comments:

Post a Comment