அடலைட்டின் இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாமில் வேகப்பந்து வீச்சாளர்களான டக் பொலிஞ்னர், றியோன் ஹாரிஸ் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் மிச்சேல் ஜோன்சன், பென் ஹில்பென்ஹஸ், சேவியர் டொஹட்ரி ஆகியோர் இருந்தும் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவர்கள் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 517 ஓட்டங்களைக் குவித்தார்கள். களமிறங்கிய மூவரும் சதத்தை கடந்தார்கள்.
இந்நிலையில் அணியில் வேறு பந்துவீச்சாளர்கள் தேவை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கமைய பொலிஞ்னர், ஹாரிஸ் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment