Search This Blog

Pages

Thursday, December 2, 2010

சூர்யாவுக்கு கதை சொன்ன செல்வராகவன்


செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் க்ரைம் த்‌ரில்லர் ஒன்றை தொடகினார். இதன் படப்பிடிப்பு லடாக்கில் சில நாட்கள் நடந்தது.
பிறகு அந்தப் படம் காரணம் சொல்லப்படாமலேயே கைகழுவப்பட்டது. தனுஷை வைத்து அவர் இயக்கிய மறவன் படமும் எந்த சேதியும் இல்லாமல் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில் சூர்யாவிடம் செல்வராகவன் கதையொன்றை கூறியிருக்கிறார். கதையை கேட்ட சூர்யா, கண்டிப்பாக இந்த‌க் கதையில் நடிக்கிறேன் என்று கூறியதாக‌த் தெ‌ரிகிறது. 7ஆம் அறிவு, கே.வி.ஆனந்தின் படம் இரண்டும் முடிந்த பிறகு சூர்யா செல்வராகவனின் கதையில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment