Search This Blog

Pages

Thursday, December 2, 2010

முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி


வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி தாகாவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணியினரை, அப்துர் ரசாக் வேகத்தில் மிரட்டினார். இவரது துல்லிய பந்துவீச்சில் பிரண்டன் டெய்லர் (27), சிபாபா (24), கேப்டன் சிகும்புரா (7) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் வெளியேறினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகப்வா (45), எர்வின் (41) நம்பிக்கை அளித்தனர். ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 209 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசம் சார்பில் அப்துர் ரசாக் 4, சுக்ரவாடி சுவோ, மக்மதுல்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (23) சுமாரான துவக்கம் அளித்தார். இம்ருல் கெய்ஸ் (41) நம்பிக்கை அளித்தார். சித்திக் (11), அஷ்ரபுல் (6) உள்ளிட்டோர் ஏமாற்றம் அளித்தனர். பொறுப்பாக ஆடிய கேப்டன் சாகிப் அல் ஹசன் (63) நம்பிக்கை அளித்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற வங்கதேச அணி 49 ஓவரில் 200 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் கிறிஸ் மபோபு 3, பிரைஸ் 2, உட்சேயா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை தாகாவில் நடக்கிறது


No comments:

Post a Comment