Search This Blog

Pages

Thursday, December 2, 2010

தமிழ் படங்களில் நடிக்க ஆசை : பிரியாமணி


சூர்யாவுடன் பிரியாமணி நடித்த ரத்த சரித்திரம் படம் விரைவில் ரிலீசாகிறது. இப்படத்தின் இந்தி, தெலுங்கு பதிப்புகள் ஏற்கனவே வந்து விட்டன.
இப்படம் குறித்து பிரியா மணி சொல்கிறார்.
தெலுங்கில் ரத்த சரித்திரம் வெற்றிகரமாக ஒடியது. அங்கு வாழ்ந்த ஒருவரின் உண்மைக் கதை என்பதால் வரவேற்பு இருந்தது. ஆனால் தமிழ் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று புரியவில்லை.
சூர்யா, விவேக் ஒபராவை சுற்றித்தான் கதை நடக்கும். நான் சூர்யா பக்கம் இருப்பேன். பருத்தி வீரன் படத்தை பார்த்துதான் இந்த கேரக்டருக்கு ராமகோபால் வர்மா என்னை தேர்வு செய்தார். நூறு சதவீதம் உழைப்பை கொடுத்துள்ளேன். நானே டப்பிங் பேசவும் செய்துள்ளேன்.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைய வில்லை. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவருடனும் நடித்து விட்டேன். இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள்.

No comments:

Post a Comment