உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
2005ஆம் ஆண்டும் கிம் கிளைஸ்டர்ஸ் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அதன் பிறகு ஓய்வு பெற்ற கிம் கிளைஸ்டர்ஸ் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் சர்வதேச டென்னிஸ் உலகிற்கு வந்தார்.
மற்றொரு பெல்ஜியம் வீராங்கனையும், ஓய்விலிருந்து வெளியே வந்தவருமான ஜஸ்டின் ஹெனின் ஹார்டீனுக்கும் மீண்டுவந்த சிறந்த வீராங்கனை விருது அளிக்கப்பட்டது.
செக்.குடியரசு வீராங்கனை பெட்ரா க்விடோவா சிறந்த புதிய வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த இரட்டையர் வீராங்கனைகள் விருது அர்ஜெண்டீனாவின் கிசேலா டுல்கோ, மற்றும் இத்தாலியின் பிளாவியா பென்னட்டா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment