இப்போதெல்லம் தமிழ் ஹீரோக்களுக்கு பாலிவுட்டும் ஒரு கனவுப் பிரதேசமாக மாறிவிட்டது. மாதவன், விக்ரம், சூரியாவைத் தொடர்ந்து சிம்புவும் பாலிவுட்டில் நுழைகிறார். |
‘வேட்டை மன்னன்’ படத்தின் மூலம் சிம்புவின் பாலிவுட் கனவு நிறைவேறவிருக்கிறது.. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை உட்பட மூன்று ஹீரோயின்கள். படத்தை இயக்கும் புதியவர் நெல்சனின் வாயைத் துருவினால் வேட்டை மன்னன் பற்றி விலாவாரியாகச் சொன்னார். “இந்த படம் ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரி. காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். ரொம்ப ஸ்டைலிஷான படம். தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதியதாக இருக்கும். மூன்று முன்னணி நடிகைகளிடம் பேசிவருகிறோம். அவர்கள் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும். இந்த படத்தின் கதை, எல்லா மொழிக்கும் ஏற்றது என்பதால் இந்தி, தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இந்தப் படம் மூலம் சிம்பு, இந்திக்குச் செல்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மெக்ஸிகோ, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் படமாக்க இருக்கிறோம். ஹாலிவுட் கலைஞர்கள் சிலர் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். தற்போது சென்னையில் சிம்பு சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கும். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்கிறோம். அது என்ன தொழில்நுட்பம் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது”என்கிறார். நேற்று ஒரு வழியாக வானம் படத்தின் ஒரு பாடலைச் சென்னையில் வெளியிட்டார்கள். ஆனால் மீடியாவுக்கு அழைப்பு இல்லை. |
Thursday, December 2, 2010
பாலிவுட்டில் நுழையும் சிம்பு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment