புற்றுநோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் ஆஸ்பிரின் வலிநிவாரண மாத்திரைக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
மனிதர்களுக்கு 40 வயதை கடந்துவிட்டால், கொடிய நோய்கள் அழையா விருந்தாளிகளாக உடலில் புகுந்து விடுகின்றன. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர உலகில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த இரண்டு நோய்களும் முக்கிய காரணமாக உள்ளன.
இந்த நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 75 மி.கி. ஆஸ்பிரின் வலி நிவாரண மாத்திரை எடுத்துக் கொண்டால் புற்றுநோய், இருதய நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கை "தி லான்செட்' பத்திரிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது
No comments:
Post a Comment