Search This Blog

Pages

Thursday, December 2, 2010

எதிர்கால கேப்டன் கோஹ்லி : வாசிம் அக்ரம் புகழாரம்


தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லிக்கு எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி உள்ளது,'' என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி. கிடைக்கும் வாய்ப்புகளில் அடுத்தடுத்து அசத்தி, எல்லோரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:
சமீப காலமாக விராத் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் அபார திறமை வெளிப்படுத்தி வருகிறார். சச்சின், டிராவிட் மற்றும் லட்சுமண் போன்று நிலையான ஆட்டத்தை தருகிறார். இன்னும் போட்டியின் அனைத்து பிரிவிலும் கவனம் செலுத்தி, கடுமையாக போராடினால், எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. தலைமை பணியை சிறப்பாக செய்யும் அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது.
இவர் சிறந்த வீரர் தான் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதேநேரம், பேட்ஸ்மேன் என்பவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்த வேண்டும். அதுபோல, விராத் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுள்ள அஷ்வின், அழகாக பந்து வீசுகிறார். போட்டியின் பதட்டமான சூழலிலும், அமைதியாக பலவிதமான வகைகளில் பவுலிங் செய்கின்றார். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.


No comments:

Post a Comment