Search This Blog

Pages

Thursday, December 2, 2010

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா இலகு வெற்றி


நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலும்; இந்தியா இலகு வெற்றியீட்டியுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
இந்தியாவின் ஜெய்ப்பூர் மானசிங் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் மார்டின் குட்பில் 70 ஓட்டங்களையும், ஸ்கொட் ஸைடைரிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் சிறிசாந்த் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மட்டும் இழந்து 259 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் அணித் தலைவர் கௌதம் காம்பீர் ஆட்டமிழக்காமல் 138 ஓட்டங்களையும், விராட் கோலி 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மெக்கே மற்றும் விட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கௌதம் காம்பீர் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.


No comments:

Post a Comment