Search This Blog

Pages

Thursday, December 2, 2010

ஆர்யா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


ஆர்யாவுக்குப் போதாத நேரமோ என்னமோ. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து சைலண்டாக முன்னேறிவரும் அவர் இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
வெளி நாட்டில் நடந்த பட விழா வொன்றில் அவர் தமிழ் சினிமா குறித்து இழிவாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்துக் கோடம்பாக்கத்தில் ஆர்யாவுக்கு எதிரான புயல் மையம் கொண்டுள்ளது.
மலையாளத்தில் மிகவும் திறமை இருந்தால்தான் மதிப்புக் கிடைக்கும் என்றும் தமிழில் சுமாரான திறமை இருந்தால்கூட வரவேற்புக் கிடக்கும் என்ற ரீதியில் பேசியதாகத் தெரிகிறது. அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்தவரான ஆர்யாவின் இந்தப் பேச்சுக்குத் திரைப்படத் தொழிலாளர் சங்கத்தலைவர் வி.சி. குகநாதன் கண்டனம் தெரிவித்தார். சமீப காலமாக சினிமா விவகாரங்களில் அதிரடியாகக் கருத்துச் சொல்லியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வரும் இந்து மக்கள் கட்சி ஆர்யாவின் உருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டங்கள் நடத்தியது. அவர் நடித்து நாளை ரிலீசாக உள்ள ‘சிக்கு புக்கு’ படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
கலங்கிப்போன ஆர்யா இது தொடர்பாகத்ட் ஹன்னிலை விளக்கம் அளிக்கும் கடிதம் ஒன்றை நடிகர் சங்கத்துக்கு அனுப்பினார். தமிழ் சினிமாவையும் தமிழ் நடிகர்களையும் இழிவாகப் பேசவில்லை என்று அதில் மறுத்தார்.
இதையடுத்து, ஆர்யாவை விமர்சித்த வி.சி. குகநாதனுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நடிகர் சங்கம், பெப்சி மோதல் மற்றும் ஆர்யா மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று ஆலோசிக்க தயாரிப்பாளர் சங்கம் அவசர கூட்டத்தை கூட்டியது.
நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் பங்கேற்று காரசாரமாக பேசினார்கள். குரல்வளையைக் கடிப்பேன் என்று வி.சி. குகநாதன் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஆர்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பெப்சி நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்டு இப்பிரச்சினையில் தீர்வு காணப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் தெரிவித்தார்.
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆர்யா மேலும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தமிழ் நடிகர்களுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை என்று அதில் அவர் கூறியிருக்கிறார். “தமிழ்த் திரையுலகையும் என்னையும் பிரிக்க முடியாது. நான் தமிழ் நடிகன் மட்டுமல்ல தமிழ்ப் படங்களும் தயாரிக்கிறேன். நடிகர் சங்கம் இப்பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுக்கும் என்று கருதுகிறேன்” என்றார்.
இதற்கிடையில் அவரது சிக்கு புக்கு படம் நாளை ரிலீஸ் ஆகிரது. மதராசப் பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை அடுத்து இதுவும் வெற்றி பெற்று ஆர்யா ஹாட்ரிக் அடிப்பாரா என்று இண்டஸ்ட்ரி எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறார் ஆர்யா.

No comments:

Post a Comment