தமிழ் நடிகர்கள் தரக்குறைவாக பேசவில்லை என்று நடிகர் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். |
உள்ளம் கேட்குதே படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. அதன் பின்னர் பல படங்களில் நடித்து உச்சத்துக்கு சென்றுவிட்டார். சர்வம், மதராசபட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது சிக்கு புக்கு, பாலா இயக்கும் அவன் இவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். துபாய் பட விழாவில் ஆர்யா பங்கேற்று பேசும்போது, தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தியதாக செய்திகள் வெளியாயின. தமிழ் படங்களில் நடிக்க திறமை தேவை இல்லை. நடிக்கவும் தெரிய வேண்டாம். ஆனால் மலையாள படங்களில் நடிப்பதற்கு நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். மலையாளத்தில் தான் தரமான படங்கள் வருகின்றன என்றெல்லாம் அவர் பேசியதாக கூறப்பட்டது. இதற்கு பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் கண்டனம் தெரிவித்தார். தமிழ், நடிகர்களை இழிவாக பேசிய ஆர்யாவை விரட்டியடிப்போம் என்றும் அவர் எச்சரித்தார். இந்த விவகாரத்தில் திடீரென நடிகர் சங்கம் தலையிட்டது. ஆர்யாவை விமர்சித்த வி.சி. குகநாதனை சரத்குமார், ராதாரவி ஆகியோர் கண்டித்தனர். இதையடுத்து பெப்சிக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் மூண்டது. பெப்சி நிர்வாகிகள் ராதாரவியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இந்து மக்கள் கட்சியினரும் ஆர்யா உருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க திரையுலகினரின் கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர். இதற்கிடையில் நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழ் நடிகர்களை இழிவாக பேசவில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். |
Thursday, December 2, 2010
தமிழ் நடிகர்களை தரக்குறைவாக பேசவில்லை: ஆர்யா விளக்கம்
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment