Search This Blog

Pages

Thursday, December 2, 2010

தமிழ் மொழி பேசும் ஆப்பிள் ஐபேட்....

இந்திய 'சுவையில்' இனி 'ஆப்பிளை' சுவைக்கலாம். ஆம், ஆப்பிள் ஐபேடுகளில், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சேவையைப் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.
உலகம் முழுக்கத் தமிழர்கள் பரவியிருந்தாலும் சில விஷயங்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதில் ஒன்று ஐபேட். இதில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக் காண, பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
தற்போது வெளியாகியுள்ள புதிய ஐஓஎஸ் (4.2.1) ஆபரேட்டிங் சிஸ்டம் இந்தக் குறையைப் போக்குகிறது. இதன் மூலம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆப்பிள் ஐபேடில் படிக்கவும் அதிலிருந்து இந்திய மொழிகளில் மெயில் அனுப்பவும் முடியும்.
இந்தியச் சந்தையின் மதிப்பை உணர்ந்து, அதை அங்கீகரிக்கும் வகையில் தனது ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் இடம் பெற செய்துள்ளது
ஐபேடுகளில் தமிழ் என்பது மிகப் பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஐபேடுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்தான் மிகப் பெரிய சந்தையாக உள்ளன.
தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இணைத்திருப்பதன் மூலம் இது இனி இந்தியாவிலும் மிகப் பெரிய சந்தையாக மாறவாய்ப்புள்ளது. புதிய ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமில், புதிய மொழிகள், அகராதிகள், கீபோர்டுகள் ஆகிய வசதிகள் உள்ளன.
இருப்பினும் அதில் எந்த மொழிகளை ஐஓஎஸ் ஏற்கும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளை நாம் பயன்படுத்த முடியும்


No comments:

Post a Comment