போர் என்று சொன்னாலே எம் கண் முன்னே நிற்பது ஆயிரம் ஆயிரம் இராணுவ வீரர்களும் அவர்களின் அணிவகுப்புக்களுமே ஆனால் அறைக்குள் இருந்து கொண்டே இரண்டு நாடுகள் போர் தொடுக்க முடியும் என்பதை எம்மில் எத்தனை பேர் அறிவோம்?தகவல் தொழில்நுட்பம் தாராளமாக எம்மை வந்தடைந்திருப்பதன் விபரீதத்தை எம்மில் எத்தனை பேர் அறிவோம் ? இணையம் என்பது எமக்களிக்கும் சேவைகள் மட்டுமே எமக்கு தெறிகின்றது ஆனால் அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மம்..? அரச சேவைகள் பொதுச்சேவைகள் கணனிமயப்படுத்தப்படுவதை விரும்பும் நாம் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை புரிந்து கொள்வதில்லை
http என்பதன் அா்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் ? அதன் உபயோகம் எத்தனை பேருக்கு தெரியும்?
வலைத்ளங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் அதன் மொழிகள் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியதே இந்த hyper text transfer protocol (http) உதாரணமாக ஒரு வலைத்தளத்தி் முகவரி http://www.voknews.com என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் http பற்றியே இங்கு கூறப்பட்டது.
நாம் எமது கணனியிலிருந்து ஒரு செய்தியை அனுப்புகிறோம் என்றால் அது எவ்வாறு இன்னுமொருவறை சென்றடைகின்றது? எமது இணைய வழங்குனா் வித்தியாசமானவா் , எமது இணைய உலாவி வித்தியாசமானது , உலாவிகளின் மொழி வித்தியாசமானது என்று வேறுபடும் போது எவ்வாறு சரியான தகவல் மற்றவரை சென்றடைகின்றது? இங்குதான் http எனும் அமெரிக்காவின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு பயன்படுத்தப்படுகின்றது. அதாவது எமது தகவல்கள் இன்னுமொரு ஊடகத்தனூடாவே செல்கின்றது என்பது உறுதியாகின்றது. ஆகவே அது பாதுகாப்பானது என்று எம்மால் எவ்வாறு கூற முடியும்…?
சரி இணையம் பாதுகாப்பற்றது என்பதை பார்த்து விட்டோம் அதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்துக்களையும் பார்த்து விடுவோம் .
சில வருடங்களின் முன்னா் ரஷ்யா ஜோர்ஜியா யுத்தத்தில் ரஷ்யா எவ்வாறு ஜோர்ஜியாவை தன் வழிக்கு கொண்டு வந்தது தெரியுமா?
கடந்த வருடம் உலகத்தையே ஆட்டி வைக்கும் அமெரிக்காவின் ஆளிள்ளா உளவு விமானம் எவ்வாறு ஈரானின் இராணுவ விமான தளத்தில் தரையிறங்கியது தெரியுமா?
இவையனைத்திற்கும் பின்னால் நிற்பவா்கள்தான் கணனி வல்லுனா்கள் இவர்கள் செய்யும் இப்படிப்பட்ட ஒரு நாட்டை அடிமைப்படுத்தும் வேலைக்கு பெயா்தான் சைபா் யுத்தம்
இவா்கள் செய்யும் வேலை இலகுவான ஒன்றல்ல ஆனால் அரசுகளை ஆட்டம் காண வைத்திருக்கின்றது. அதிலும் அமெரிக்காவே ஆடும் அளவுக்கு அதன் வளா்ச்சி வியாபித்திருக்கின்றது.காரணம் இதுவரை அவா்கள்தான் இப்படியான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்தனா். அறிவியல் என்ற போர்வையில் அவர்கள் எமக்கு அளித்த அனைத்திலம் அவர்களின் உளவு வேளைகள் இடம்பெற்று வந்ததை இன்று அரசுகள் நன்றாக புரிந்து கொண்டுள்ளன அதிலும் மத்திய கிழக்கு நாடுகளிலேதான் இவா்களின் விளையாட்டுக்கள் அதிகம் இடம்பெறுவது வழக்கம்.
மத்திய கிழக்கை இறத்த வெள்ளத்தில் ஆழ்த்த தயராக இருக்கும் இரண்டு நாடுகளே இந்த வகை யுத்தத்தில் இன்று அதிகம் மோதிக்கொண்டு இறுக்கின்றன. ஈரானும் இஸ்ரேலுமே அந்த நாடுகள்
இது சற்று சுவாரஷ்யமான விளையாட்டு ஒரு பக்கம் அமெரிக்கா , பிரித்தானியா , பிரான்ஸ் முக்கியமாக இஸ்ரேல் ஏனென்றால் மத்திய கிழக்கு நாடுகளின் இராணுவ பலவீனமே இவர்களின் பலம் அதனாலயே பலஸ்தீன் என்ற ஒரு நாட்டு மக்களை விரட்டிவிட்டு அந்த நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அகற்றிவிட்டு இஸ்ரேல் தேசத்தை நிறுவினா். மறுபக்கம் ஈரான் ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியுடன் .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம். ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அமெரிக்கா தயாரித்து ஈரானின் நத்தான்ஸ் அணுவாலையை நோக்கி ஏவிய கணினி வைரஸ், அணுவாலையின் கட்டமைப்பில் இருந்து தவறுதலாக வெளியேறி கணினி வலைப்பின்னல்களில் பரவிய சமயத்தில் கணினி பாதுகாப்பு வல்லுனர்கள் அதனைக் கண்டுபிடித்தார்கள்.
அதற்கு ஸ்டக்ஸ்நெட் (Stuxnet ) ௭ன்று பெயரிட்டார்கள். ஸ்டக்ஸ்நெட் போன்றதொரு வைரஸை சமானியர்கள் உருவாக்க முடியாது. அதன் பின்னணியில் மாபெரும் சக்தியொன்று உள்ளதென வல்லுனர்கள் கூறியபோது, அமெரிக்கா மௌனம் காத்தது. ஆனால், அந்த வைரஸை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து தீவிரமாக ஆராய்ந்தபோது அது அமெரிக்காவின் தயாரிப்பு ௭ன்பது நிரூபணமானது.
இனிமேலும் ரகசியத்தைக் கட்டிக்காக்க முடியாது ௭ன்பதை அமெரிக்கத் தலைவர்கள் உணர்ந்தார்கள். வெள்ளை மாளிகையின் ரகசிய அறையில் கூடி அடுத்து ௭ன்ன செய்யலாமென ஆராய்ந்தார்கள். ஸ்டக்ஸ்நெட் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னமும் உலகம் மீண்டெழாத நிலையில், இன்னொரு அதிர்ச்சி. புதியதொரு கணினி வைரஸ்.
இதன் பெயர் ப்ளேம் (Flame) தமிழில் சுவாலை ௭னலாம். புதிய வைரஸ் ஈரானை மாத்திரம் தாக்கவில்லை. மத்திய கிழக்கின் பல நாடுகளில் உள்ள கணினிகளில் இருந்து முக்கியமான தகவல்களைத் திருடியிருக்கிறது. இந்த ப்ளேம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் மிகவும் மோசமானதென கணினி பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஸ்டக்ஸ்நெட் வைரஸை உருவாக்கிய தேசமே இதனையும் உருவாக்கியிருக்கக்கூடும் ௭ன்பது வல்லுனர்களின் ஊகம். ப்ளேம் வைரஸை உருவாக்கியது தாமே ௭ன்பதை இதுவரை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. சில நாட்கள் கழித்து உண்மை தெரிய வரலாம். உண்மை ௭துவானதாகவும் இருக்கலாம்.
ஆனால், இன்று இத்தகைய வைரஸ்களால் உலகம் ஆபத்தானதாக மாறியிருக்கிறது ௭ன்பதே மறுக்க முடியாத யதார்த்தம். முதலில் ஸ்டக்ஸ்நெட் வைரஸை நோக்குவோம். இந்த வைரஸ், ஈரானின் அணுவாலைகள் ௭ன்ற அரசியல் சர்ச்சையுடன் தொடர்புடையதாகும். ஈரானில் அணுவாலைகள் இருக்கின்றன. அந்நாடு அணுவாயுதங்களைத் தயாரிக்கிறதென அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் கருதுகிறது.
தாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காகவே அணுவாலைகளை இயக்கி வருவதாக ஈரானிய அரசாங்கம் வாதிடுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் நீடிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுத கண்காணிப்பு அமைப்பின் ஊடாகவும் தீர்வு காணமுடியாத நிலை. தீர்வு முயற்சிகள் ஒருபுறமிருக்க,
ஈரானை ௭ப்படியாவது அடக்க வேண்டும் ௭ன்பது அமெரிக்காவின் நோக்கம். நேரடியாகத் தாக்க முடியாது. தாக்கினால் மத்திய கிழக்கு முழுவதும் போர்க்களமாக மாறிவிடும். ஈரானை ௭ன்ன செய்யலாமென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தான், ஜெனரல் ஜேம்ஸ் கெட்ரைட் ௭ன்பவர் புதியதொரு யோசனையை முன்வைத்தார்.
அது 2006ஆம் ஆண்டில். ஈரானின் நத்தான்ஸ் நிலக்கீழ் அணுவாலையின் இயந்திரங்களை இயக்கக்கூடிய கணினி வலைப்பின்னலை ௭ப்படியாவது ஊருருவி, அணுவாலையின் சுழற்சி(CentriFuges) இயந்திரங்களை செயலிழக்கச் செய்வது அவரது திட்டம். ஈராக்கில் பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிக் கொண்டு அந்நாட்டை ஆக்கிரமித்ததன் விளைவுகளால் ஜோர்ஜ் டபிள்யு புஷ் மூக்குடைபட்டு நின்ற வேளை.
ஈரானில் அணுவாயுதங்கள் உள்ளதாகக் கூறிக் கொண்டு அந்நாட்டை ஆக்கிரமிக்க முடியாத நிலையில் இருந்ததால் ஜெனரல் கெட்ரைட்டின் யோசனைக்கு அவர் உடன்பட்டார். ஒலிம்பிக் கேம்ஸ் (Olypique Games) ௭ன்ற குறியீட்டுப் பெயருடன், கணினி வைரஸை உருவாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
நத்தான்ஸ் அணுவாலையை ஊடுருவுதல் ௭ன்பது இலேசுப்பட்ட காரியமாக இருக்கவில்லை. அதற்காக அமெரிக்கா இஸ்ரேலின் துணையை நாடியது. இஸ்ரேலின் புலனாய்வு அமைப்புகள் நத்தான்ஸ் ஆலை ௭வ்வாறு செயற்படுகிறது ௭ன்ற விடயத்தை அமெரிக்க கணினி வல்லுனர்களுக்குப் பெற்றுக் கொடுத்தன. அமெரிக்க நிபுணர்கள் நித்திரையில்லாத பல இரவுகளுக்குப் பின்னர் ஒரு கணினி வைரஸை வடிமைத்தார்கள்.
நத்தான்ஸ் அணுவாலையின் செயற்பாடுகளையொத்த மாதிரி வலைப்பின்னலை உருவாக்கி, வைரஸை பரிசோதித்துப் பார்த்தார்கள். இந்த முயற்சியில், பாகிஸ்தானிய அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ௭ன்பவர் கறுப்புச் சந்தையில் விற்றதாகக் கூறப்படும் சுழற்சி இயந்திரங்களுக்குரிய தொழில்நுட்பமும், லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியிடம் இருந்து பெற்ற மாதிரி வடிவங்களும் கூட பயன்பட்டதாகத் தெரிகிறது.
சகல காரியங்களும் பூர்த்தியாகி நத்தான்ஸ் அணுவாலையின் கணினி வலைப்பின்னலுக்குள் கணினி வைரஸ் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக, சுழற்சி இயந்திரங்கள் அசுர வேகத்தில் சுழன்றன. ஈரானிய விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி. ஆலையில் ஏதோ கோளாறு ௭ன்று நினைத்துக் கொண்டு, அவர்கள் பலரை வேலை நீக்கம் செய்தார்கள். இந்த சமயத்தில் அமெரிக்காவின் ஆட்சிபீடத்தில் மாற்றம் நிகழ்ந்தது. புஷ் சென்றார். மாற்றம் ௭ன்ற தாரகத்துடன் ஓட்டுக் கேட்டு வெற்றி பெற்ற ஓபாமா வந்தார்.
ஆனால், ஈரானை இல்லாதொழிக்க வேண்டும் ௭ன்ற கொள்கையில் மாற்றம் இருக்கவில்லை. ஒலிம்பிக் கேம்ஸ் கணினி வைரஸ் திட்டத்தை தொடர்ந்து ரகசியமாகப் பேணி ஈரானைத் தாக்குமாறு புஷ் அன்புடன் விடுத்த வேண்டுகோளை ஒபாமா தாழ்மையுடன் சிரமேற்றார். அவரது ஆட்சியிலும் நத்தான்ஸ் ஆலையின் மீது அடுத்தடுத்து கணினி வைரஸ்கள் ஏவப்பட்டன.
2010ஆம் ஆண்டு ஏவப்பட்ட வைரஸின் நிரலில் சிறியதொரு தவறு விழைந்தது. நத்தான்ஸ் ஆலையின் சுழற்சி இயந்திர வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட பொறியியலாளரின் கணினிக்குள் அது தொற்றிக் கொண்டது. பொறியியலாளர் கணினியை வெளியே ௭டுத்துச் சென்று அதனை இணையத்துடன் இணைத்தபோது, அந்த வைரஸ் கணினியின் ஊடாக உலகெங்கும் பரவியது. அதனை கணினி வல்லுனர்கள் கண்டுபிடித்தார்கள்.
ஸ்டக்ஸ்நெட்டின் கதை இதுதான். இதில் விஷயம் ௭ன்னவென்றால், தமது குட்டு வெளிப்பட்டு விட்டது குறித்து அமெரிக்கத் தலைவர்கள் கவலைப்படவில்லை. தாம் திட்டமிட்டு நடத்திய சைபர் தாக்குதலை ஈரான் சுதாரித்துக் கொண்டு மீண்டெழுந்து விட்டது ௭ன்பதே அவர்களின் கரிசனையாக இருந்தது. ஸ்டக்ஸ்நெட் வைரசை உருவாக்கும் முயற்சிகளில் தொடர்புடையவர்களிடம் இருந்து பத்திரிகையாளர்கள் கறந்த தகவல்களில் இருந்து இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில், இந்த வைரஸூக்கும் தமக்கும் இடையில் தொடர்பில்லையென அமெரிக்கர்கள் கூறியபோதும், குட்டு வெளிப்பட்ட சமயம் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். ப்ளேம் வைரஸ் விவகாரத்தில் ௭ன்ன நடக்கும் ௭ன்பது தெரியவில்லை. ஸ்டக்ஸ்நெட்டும், ப்ளேமும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டன. அதுவரை அவை மௌனமாக வேலையைக் காட்டிக் கொண்டிருந்தன.
இவை போன்று இன்னமும் ௭த்தனை வைரஸ்கள் இணையத்தளத்தில் உலா வருகின்றன ௭ன்பது முக்கியமான கேள்வி. இத்தகைய வைரஸ் மென்பொருள்கள் சமகால உலகின் அழிவிற்கும் வழிவகுக்க முடியுமென ப்ளேம் வைரஸை கண்டுபிடித்த இயூஜின் கெஸ்பர்ஸ்க்கி ௭ன்ற ரஷ்யர் கூறுகிறார். உண்மை தான். இன்றைய உலகம் கணினி வலைப்பின்னல்களால் முற்று முழுதாக பிணைக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகின் விமானப் போக்குவரத்துத் துறை முழு அளவில் கணினியில் தங்கியுள்ளது.
மின்சார வலைப்பின்னலில் கணினிகளால் இணைக்கப்பட்டுள்ளன. இதை விட தகவல் தொடர்பாடல் துறையில் கணினியின் ஆதிக்கம் அதிகம். இத்தகைய வலைப்பின்னல்கள் கணினி வைரஸால் தாக்கி செயலிழக்கப்படும்போது ஒட்டுமொத்த உலகின் செயற்பாடும் ஸ்தம்பித்துப் போகக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு வலுவான கணினி வைரஸை உருவாக்கி அதனை இன்னொரு நாட்டின் மீது ஏவி விடுகையில், குறித்த நாட்டையும் தாண்டி மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் ௭ன்பதை ஏவி விடுவோர் அறியாமல் இல்லை.
ஆனால், அழிவை ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கையில் பின்விளைவுகள் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ராஜதந்திர முயற்சியாலும், மரபு வழிப் போர்களாலும் ஈரானை அடிபணிய வைக்க முடியாத நிலையில், அதனை இலக்கு வைத்து ஸ்டக்ஸ்நெட் வைரஸை ஏவி விடுவதை சைபர் யுத்தம் ௭ன்று அமெரிக்கா கூறிக் கொள்ள முடியும்.
மேற்கு நாடுகளின் செயற்பாடுகளுக்கு ஈரானும் சும்மா இருக்கவில்லை கடந்த வருடம் உலகத்தையே ஆட்டி வைக்கும் அமெரிக்காவின் ஆளிள்ளா உளவு விமானம் ஈரானின் பென்டகன் மீதான ஈரானின் சைபா் தாக்குதலினாலேயே சாத்தியமானது.
அது மட்டுமன்றி இன்றைய காலங்களில் அடிக்கடி இஸ்ரேலுடன் இப்படியான யுத்தங்கள் மூலமே அரேபிய இளைஞா்கள் பலா் மோதிக்கோள்கின்றனா் காரணம் அணு ஆயுதங்கள் கூட இங்த சைபா் யுத்தத்தின் முன்னால் செல்லாக் காசாகத்தான் போய்விடுகின்றன. அறிவுக்கும் தேடலுக்கும் தைரியத்துக்குமே இங்கு பலம்
அண்மையில் வெளியாகிய இஸ்லாமிய அவதூறு திரைப்படத்துக்கு பதிலடியாக
ஈரானிய கணணி நிபுணர்கள் குழு ஓன்று 370 இஸ்ரேலிய வெப்தளங்களை இன்று வெற்றிகரமாக இன்று தகர்த்துள்ளதாக தெரிய வருகின்றது
Iranian Datacodersஎன்று தம்மை அழைத்துகொண்ட கணணி நிபுணர் குழு ஓன்று இஸ்ரேலின் உள்ள அரச சார்பான வர்த்தக இபாதுகாப்பு பொருளாதார மற்றும் இன்டர்நெட் விநியோகிக்கும் நிறுவனங்களின் 370 வெப்தளங்கள் இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன .
இஸ்ரேலின் முன்னணி ono security மற்றும் teva வெப்தளங்களும் தகர்க்கப்பட்ட வெப்தளங்களில் அடங்கும்
நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை அவதூறு கூறும் திரைப்படத்தை தயாரிக்க யூத அமைப்புகளும் பல யூதர்களும் நிதி உதவி செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த செய்திகள் எமக்கு சொல்லும் பாடம் வல்லரசுகள் கூட அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த அஞ்சுகின்றன காரணம் ஏவப்படும் அணு ஆயுதத்தின் இலக்கை சைபா் தாக்குகலின் மூலம் திசை திருப்பிவிட்டால்? அது தனது சொந்த நாடாகவே இருந்தால்?? மாற்ற முடியும் என்று ஈரான் அமெரிக்க உளவு விமானத்தை தரையிறக்கியதன் மூலம் நிறுபித்துவிட்டது.
இனி வரும் காலம் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளே அஞ்சி வாழ வேண்டி வரும் சொந்த நாட்டில் வைத்தே அவை வெடிக்க வைக்கப்பட்டு விடுமோ என்று. அல்லது கணனி வல்லுனா்களின் சேவை அவர்களுக்கு தேவை