Search This Blog

Pages

Monday, September 17, 2012

ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் தயார்:அமெரிக்க ஐ.நா தூதர்


Iran-warships-dock-in-Syrias-Tartous-port-270x170
ஈரான் நியூக்ளியர் குண்டுகளை பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கும் என்று ஐ.நா. அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறினார்.
ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியாதவது :-
ஈரான் நியூக்ளியர் ஆயுதங்களை பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விசயத்தில் அதிபர் பராக் ஒபாமா மிகத் தெள்ளத்தெளிவான முடிவில் உள்ளார். அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன.
இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் ஒரு கொள்கையாக உள்ளது. இதை அதிபர் பலமுறை வலியுறுத்தியும் சொல்லி வந்து இருக்கிறார். இது தான் இறுதி முடிவு. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதையே அவர்களுக்கான ரெட் லைன் என்றும் கூறிவருகிறார்.
இது குறித்து  இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் கொள்கை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றால், அந்நாட்டின் மீது எந்நேரமும் படையெடுக்கும் ஆணையை பிறப்பிக்க தேவையான அதிகாரத்தை அதிபர் பராக் ஓபாமா பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment