Search This Blog

Pages

Wednesday, September 19, 2012

பாகிஸ்தானில் யு டியூப் தடை : அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி


Tamil-Daily-News-Paper_38886225224
இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்தை கண்டித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காட்சிகள் யு டியூப்பில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, பாகிஸ்தானில் யு டியூப்களை தடை செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் ராஜா பர்வேஸ் உத்தரவிட்டுள்ளார். எனினும், மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள திர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.  ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு, பிரஸ் கிளப், போலீஸ் நிலையம் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர்.
கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயம் அடைந்தனர். கராச்சியில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment