Search This Blog

Pages

Tuesday, September 18, 2012

கல்ஃப் பகுதியை நோக்கி விரைகிறது ஈரானிய கடற்படை


IRAN articleLarge
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, ஈரானுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்றும், நாசகாரி (destroyer) கப்பல் ஒன்றும், கல்ஃப் கடல் பகுதியை நோக்கி செல்ல உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் பந்தார் அப்பாஸ் துறைமுகத்தில் தரித்து நின்ற இவ்விரு கப்பல்களும், கடலுக்குள் செல்லத் தொடங்கிவிட்டன.
கல்ஃப் கடல் பகுதியில் விசேஷமாக ஏதாவது நடைபெறுகின்றதா? ஆம். அமெரிக்க மற்றும் நேச நாட்டு கடற்படைக் கப்பல்கள் இந்தக் கடல் பகுதியில்தான், போர் பயிற்சி ஒன்றை மேற்கொள்கின்றன.
அங்கு நடப்பது ‘போர் பயிற்சி’ என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்க மற்றும் நேசநாடுகளின் கப்பல்கள் அங்கு நிற்பதற்கு வேறு ஒரு பின்னணியும் உண்டு. இந்த கடல் பகுதியில் ஊடாக உள்ள ஆயில் ஷிப்பிங் கடல் ரூட்டுகளை ‘திறந்த நிலையில்’ வைத்திருப்பதற்காக அங்கே நிற்பதுதான், நிஜ பின்னணி.
இந்த கடல் ரூட்டுகளை ஈரான் முடிவிடலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. ஈரான் முடினால், ஐரோப்பாவுக்கும், அதற்கு மேல் அட்லான்டிக் சமுத்திரம் வழியாக வட அமெரிக்காவுக்கும் செல்லும் எண்ணைக் கப்பல்கள் செல்வது பாதிக்கப்படும்.
ஈரான், ஹோமுஸ் கடல் பாதையை “இதோ மூடுகிறேன், அதோ மூடுகிறேன்” என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தாலும், இதுவரை மூடவில்லை. ஆனால், இனியும் மூடாமல் இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. ஈரானின் அணு ஆலைகள் மீது தாக்குதல் நிச்சயம் என இஸ்ரேல் சொல்லிக்கொண்டு உள்ள நிலையில், அப்படி ஒரு தாக்குதல் நடந்தால், இந்தக் கடல்பாதை அடைக்கப்படுவது நிச்சயம்.
இப்படியான இழுபறி இந்த கடல் பகுதியில் உள்ளதால், அமெரிக்காவும், நேச நாடுகளும் தமது ‘போர் பயிற்சியை’ இந்தப் பகுதியில் நடத்திக்கொண்டு, அந்தச் சாக்கில், தமது போர்க் கப்பல்களை இங்கு வைத்திருக்கின்றன.
இந்த வாரம் ஆரம்பமான ‘போர் பயிற்சியில்’ அமெரிக்க கடற்படையுடன், பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் சில மிடில் ஈஸ்ட் நாடுகளின் கடற்படை கப்பல்களும் பங்கு கொள்கின்றன. இப்படியான போர்ப் பயிற்சிகளின் மற்றொரு நோக்கம், கடலில் ஈரான் கண்ணிவெடிகள் எதையும் மிதக்க விடாமல் தடுப்பது, அத்துடன், ஏற்கனவே மிதக்க விடப்பட்டிருந்தால், அவற்றை அகற்றுவது.
Sea mines என்ற இந்த கடல் கண்ணிவெடிகள், ஆயில் டேங்கர்களை வெடிக்க வைக்கக்கூடியவை.
இன்று ஈரான் கடலுக்குள் இரு கப்பல்களை அனுப்பியுள்ளதாக சொன்னோம். ஈரானின் பந்தார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருப்பது தரீக்-901 நீர்மூழ்கிக் கப்பல். மற்றையது சகான்ட் நாசகாரி கப்பல்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்ய தயாரிப்பு கிலோ கிளாஸ் ரகத்திலானது. ஈரானிடம் இந்த ரகத்தில் மொத்தம் 3 டீசல் பவர் எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் (தரீக்-901, நூர்-902, யூனெஸ்-903) உள்ளன. EPAM9 என்ற கால் சைன் இலக்கமுடைய சகான்ட் நாசகாரி கப்பல், அல்வான்ட் கிளாஸ் ரகத்தை சேர்ந்த, பிரிட்டிஷ் தயாரிப்பு.
அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் கப்பல்கள் உள்ள பகுதியை இந்தக் கப்பல்கள் சென்று அடையும்போதுதான், ஈரான் ஏதாவது திட்டம் வைத்துள்ளதா என்பது தெரியவரும்!
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.
அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.
ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித் தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment