Search This Blog

Pages

Friday, September 21, 2012

இஸ்லாத்திற்கு, அதன் கொள்கைகளுக்கு எதிரான திரைப்படங்களை பார்க்கலாமா?

teaser-anti-islam_0
எல்லாப்புகளும் இறைவனுக்கே…
அல் குர்ஆனும் ஹதீஸும் அனைத்து பாவங்களையும், பாவங்களுக்கு மனிதனை இட்டுச்செல்லக்கூடிய அனைத்து வாயில்களையும் தடைசெய்திருக்கின்றது.மேலும் பாவங்களில் உடன்படுவதையும் அதனைப்போல் பாசாங்கு (கேலிக்கு) செய்வதையும் தடுத்திருக்கின்றது. “மேலும் யார் யாரை நேசிக்கிறார்களோ அவர்களுடன் நாளை மறுமையில் இவர்கள் எழுப்பாட்டப்படுவார்கள் மேலும் நேசிக்கின்றவர்கள் நேசிக்கப்படுபவர்களைச் சார்ந்தவர்களே. (ஹதீஸ்)”
இவ்வாறு இறைவன் தடுக்கக்கூடிய விடயங்களில் ஒன்றுதான் இஸ்லாம் பரிகசிக்கப்படுகின்ற திரைப்படங்கள், மேலும் பாவங்களைத் தூண்டக்கூடிய களியாட்டங்கள்.
ஏனெனில் அவ்வாறான விடயங்களைப் பார்ப்பது அவர்களுடைய செயலை ஏதோ ஒரு வகையில் அங்கீகரிப்பதாகவே கருதப்படும். மேலும் யார் அவ்வாறான விடயங்களைப் பார்க்கிறாரோ, அதனை அங்கீகரிக்கிறாரோ, அதனை பகிஷ்கரிக்காதிருக்கின்றாரோ அவரும் அந்த செயலைச் செய்தவரைப்போலவே.
(முஃமின்களே!) ‘அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்’ என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். – 04:140
இதற்கு விரிவுரை செய்கின்ற இமாம் இப்ன் கதீர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்
“ஏனெனில் யார் அவர்களோடு உட்கார்ந்து அவர்களின் செயலை அங்கீகரிப்பரோ அவரும் அவர்களைப்போன்றவரே” என்று விரிவுரை எழுதுகிறார்கள்.
மேலும் இதற்கு விரிவுரை செய்கின்ற இமாம் சஹ்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்:
“நீர் அவ்வாறன சந்தர்ப்பங்களில் அவர்களுடன் உட்காருவதே அவர்களின் செயலை அங்கீகரிப்பதற்கு சமனாகும். ஏனெனில் நீர் அவர்களின் நிராகரிப்பையும் பரிகசிப்பையும் ஏற்றுக்கொண்டுவிட்டீர் மேலும் யார் அவ்வாறு செய்கின்றார்களோ அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே”
மேலும் இமாம் இப்ன் தய்மிய்யாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்:
நிர்ப்பந்தத்தைத் தவிர பாவம் நடைபெறுகின்ற இடங்களில் ஒருவர் பிரசன்னமாகி இருப்பதுவே ஹராம் என்று கூறுகின்றார்கள் ஏனெனில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் அருந்தப்படுகின்ற மேசைகளில் உட்காருவதை தவிர்ந்துகொள்ளட்டும்”
ஒரு சந்தர்ப்பத்தில் உமர் இப்ன் அப்துல் அஸீஸ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுடன் மதுபானம் அருந்தியவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அப்பொழுது உமர் இப்ன் அப்துல் அஸீஸ் அவர்கள், அவர்களுக்கு கசையடி வழங்குமாறு உத்தரவிட்டார்கள். அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றவர் ஒருவரும் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அதற்கு உமர் இப்ன் அப்துல் அஸீஸ் அவர்கள் அவரிலிருந்தே கசையடியை ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்
“(முஃமின்களே!) ‘அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்’ என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். – 04:140″
எனவே யார் ஒரு பாவம் நடைபெறுகின்ற கூட்டங்களில் உட்காருகின்றாரோ, அல்லது இஸ்லாத்தைப்பரிகசிக்கின்ர காட்சிகளை பார்க்கின்றாரோ அவரும் அதனைச் செயதவரைப்போலவே. மேலும் அவ்வாறான செயல்களில் இறை நிராகரிப்பு இருக்குமானால் அதாவது இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவது, நபிமார்களையும் அவர்களின் தூதையும் கொச்சைப்படுத்துவது, ஷரீஅத்தில் ஒன்றை பரிகசிப்பது, தாடி அல்லது இஸ்லாமிய பெண்களின் ஆடையை பரிகசிப்பது ஆகியவை உள்ளடங்கும். இவ்வாறான விடயங்களைப் பார்ப்பது, இவைகளை கேட்பது, மேலும் இவ்வாறான நிகழ்வுகளின் போது இறைவனுக்காக இச்செயல்களின் மீது கோபம் கொள்ளாமல் இருப்பது அல்லது இவைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நடந்துகொள்வது அனைத்தும் அதனைச் செய்தவர்போலவே
-கலாநிதி ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ரஹிமஹுல்லாஹ்)
தமிழில் மொழிமாற்றம் – முஹம்மட் நிஸாட்
ஆங்கலத்தில் முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள்

No comments:

Post a Comment