Search This Blog

Pages

Wednesday, September 19, 2012

பேராதனை மாணவர்களின் சத்தியாக்கிரகம் தடுக்கும் முயற்சியில் பொலிசார்


peradeniya studen's protest to reopen university
பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பிரச்சினைகளை தீர்த்து உடன் பல்கலைகழகங்களை திறக்குமாறு கோரி பேராதனை கல்கலைகழக மாணவர்கள் குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் கண்டி ஜோர்ஜ் ஈ.டி. சில்வா பூங்காவில் சத்தியக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி பொலிஸார் மேற்படி சத்தியாகிரகத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்ட போதும் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் சத்தியாகிரகத்தை நடத்தி வருகின்றனர்.
பேராதனை பல்கலைகழக மாணவர் குழுவொன்று கண்டி நகரில் பொது மக்களுக்கு பாதிப்பாக சத்தியகிரகத்தில் ஈடுபடுவதனால் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு  இன்று புதன்கிழமை தாக்கல் செய்த மனுவினை கண்டி பிரதான நீதவான் ரவீந்திர பிரேமரத்ன தள்ளுபடி செய்தார்.
இதற்கு பதிலளித்த பிரதான நீதவான் ரவீந்திர பிரேமரத்ன, ‘மாணவர்களது சத்தியாக்கிரகத்தினால் பொது மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்ற தேவையில்லை’ என்று கூறி பொலிஸாரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதே வேளை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சஞ்சீவ பண்டார கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment