Search This Blog

Pages

Thursday, September 20, 2012

வீடியோவுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: நிராகரிக்கிறது அமெரிக்கா


1347634672-protest-against-the-american-film-'innocence-of-muslims'---cairo_1446082
இஸ்லாத்தை அவமதிக்கும் வீடியோவின் உள்ளடகத்தையும்கருத்துக்களையும்  அமெரிக்கா உறுதியாக நிராகரிப்பதாக அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உலகெங்குமுள்ள பல முஸ்லிம்களையும் ஏனையோரையும் புண்படுத்தும் வகையில் அண்மையில் வெளியான  வீடியோ குறித்து ஜனாதிபதி ஒபாமா மற்றும் வெளிவிவகார செயலாளர் கிளின்டன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை அமெரிக்க தூதரகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.
அந்த வீடியோவின் உள்ளடக்கத்தையும் தகவலையும் அமெரிக்கா உறுதியாக  நிராகரிக்கிறது என்பதுடன் இந்த வீடியோவுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஏனையோரின் மத நம்பிக்கைகளை அவதூறுக்குள்ளாக்குவதற்கு வேண்டுமென்றே மேள்கொள்ளப்படும் எந்த முயற்சி குறித்தும்  அமெரிக்கா விசனமடைகிறது.
அமெரிக்காவானது ஒரு பல்லின, பல் மத சமூகம் என்ற வகையில், எந்த தேசத்தினதும் எந்த மக்களதும் ஸ்திரத்தன்மைக்கு மத சகிப்புத்தன்மை அவசியம் என நம்புகிறது. அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது அடிப்படை  உரிமைகளில் ஒன்றாகும். ராஜாங்க செயலாளர் கிளின்டன் கூறியுள்ளதைப் போல், மதத்தின் பெயரிலான வன்முறையை நாம் முழுமையாக நிராகரிப்பதுடன் வெறுக்கிறோம்.
லிபியாவில் எமது சகாக்களின் உயிரிழப்புக்கு அனுதாபமும் கண்டனமும் தெரிவித்தமைக்காகவும் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுக்கு கோரிக்கை விடுத்தமைக்காகவும் இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள அதிகாரிகள், ஆன்மீக தலைவர்கள், சமூக தலைவர்களுக்கு  இத்தூதரகம் நன்றி தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment