Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

கல்முனையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்


sm
- அப்துல்லாஹ் -
நேற்று முன்தினம் மாலை வழமை போல் ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்காக எம்.வை.றுஸ்கின் என்பவருக்கு சொந்தமான டங்கிப் படகில் தண்டையல் (படகை வழி நடாத்துபவர்) உட்பட மூன்று பேர் மாலை 3.00 மணியளவில் கல்முனைக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய எம்.ஐ.லத்தீப் என்பவரே இவ்வாறு காணாமல் போனவராகும்.
இவரை நேற்று மாலை வரை கடலிலும் கரையிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக கல்முனைப் பொலிஸிலும் கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று இரவு 7.30 மணியளவில் கரைக்கு வந்த அப்படகில் சென்ற அஷ்ரப் (வயது 35), மற்றும் சின்னவன் (வயது 45) ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக கேட்ட போது
மீன் பிடித்து விட்டு அதிகாலையில் கரையை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது நேரம் 4.15 அளவில் வெளிச்சம் தெரிகிறது நீங்கள் சற்று தூங்குங்கள் நான் படகை ஓட்டுகிறேன் என தண்டயல் கூற நாங்கள் உள்ளுக்குள் தூங்குவதற்காகச் சென்றோம். அப்போது திடீரென உக்கல் (பெரிய அலை) அடித்தது. உடனே வெளியே வந்து பார்த்த போது தண்டயலைக் காணவில்லை. அவ்வேளையிலிருந்து வேறு படகுகளின் உதவியுடன் தேடியும் அவரைக் கண்டு பிடிக்கமுடியவில்லை எனக் கூறினார்கள்.
நேற்று கல்முனை துறையைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லாமல் துக்கம் அனுஷ்டித்தனர். இன்று கல்முனை துறையில் தரித்து நிற்கும் சகல இயந்திரப்படகுகளும் இவரை தேடும் பணியில் ஈடுபடவுள்ளன.
இலங்கையின் எந்தப்பகுதியிலாவது இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத் தலைவர் முஹம்மட் நஸீரின் தொலைபேசி ( 0772355430) இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டகப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment