Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

தொடர்கிறது பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ; தடுக்க அரசு மும்முரம்


university lectures strike
உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆரம்பித்த எதிர்ப்புப் பேரணி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகிறது. 
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் எதிர்ப்புப் பேரணி  இரண்டாவது நாளாக நேற்று அளுத்கமவில் நிறைவுபெற்றதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி யட்டோகொடவில் நிறைவுபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினால் கடந்த 24ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று அளுத்கமவில் இருந்து ஆரம்பமாகி களுத்துறையில் நிறைவடைந்தது.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி அம்பேபுஸ்ஸவில் இன்று ஆரம்பமாகியது.
அம்பேபுஸ்ஸ வரக்காபொல ஊடாக செல்லும் இந்தப் பேரணி நிட்டம்புவவில் இன்று நிறைவடைந்தது.
விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்புப் பேரணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பை வந்தடைய உள்ளதுடன், அங்கிருந்து அலரி மாளிகை வரை செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையின் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இப் பேரணி அலரி மாளிகை வரை சென்றால், பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும் அத்துடன் ஆர்ப்பாட்டகார்கள் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு பிரவேசித்தால், அங்கு பதற்றம் ஏற்படலாம் எனவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மணவர்களின் ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என தெரிவித்த நீதவான் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் செயற்பட வேண்டிய விதம் சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment