Search This Blog

Pages

Monday, September 17, 2012

நோக்கியா வௌயீட்டில் Asha 311


nokia_asha
கைப்பேசி உற்பத்திகளில் கதாநாயாகனாகத் திகழும் நோக்கியா நிறுவனத்தின் புதிய வௌயீட்டில் Asha 311 எனும் கைப்பேசியானது தற்போது புதிதாக இணைந்துள்ளது.
கோர்னிங் கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதும், 3 அங்குல அளவினைக் கொண்டதுமான முழுமையான தொடுதிரைவசதியுடன் கூடிய இக்கைப்பேசியானது GSM, GPRS, EDGE ஆகிய வலையமைப்புக்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் HSDPA 3G சமிக்ஞைகளை 14.4Mbps வேகத்தில் உள்வாங்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 1GHz வேகம் கொண்ட CPU, 128MB அளவுடைய RAM ஆகியவற்றோடு, 140MB வரையிலான் உள்ளக மெமரியையும் உள்ளடக்கியுள்ளதுடன் microSD கார்ட் மூலம் நினைவக வசதியினை 32 GB வரை அதிகரிக்க முடியும்.
இவற்றுடன் 3.15 மெகாபிக்சல்கள் கொண்ட கமெரா, நோக்கியா உலாவி 2.0 போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment