Search This Blog

Pages

Monday, September 17, 2012

விரிவுரையாளர்களை உயர்தர விடைத்தாள் திருத்த வருமாறு கெஞ்சுகிறார் கல்வியமைச்சர்


results
பல்கலைக்கழக விரிவுரையாளர் களின் வேலை நிறுத்தம் தொடர்கின்ற போதிலும் அவர்கள் க. பொ. த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் கல்வியமைச்சு பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் பேராசிரியர்களையும் காப்பாற்றியிருப்பதுடன் சலுகைகளையும் பெற்றுக் கொடுத்திருப்பதனால் அவர்கள் எமது கோரிக்கைக்கு செவிசாய்ப் பார்களென நம்புகின்றோமெனவும் அமைச்சர் கூறினார்.
இதன் உத்தியோகபூர்வ வேண்டுகோள் பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமாரவினால் எழுத்து மூலம் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து கல்விமான்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குட்படுத் தப்பட்ட 523 பரீட்சை வினாத்தாள்களின் 18 இலட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட வுள்ளன. 12 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் பேர் வரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டிய இடத்தில் ஆசிரிய சங்கங்களைச் சேர்ந்த 400 பேர் வரையிலானோரே இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரிலேயே தாங்கள் இந்த வேண்டுகோளை விடுப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு மேலும் தாமதிப்பதன் மூலம் மாணவர்களின் பெறுமதிமிக்க வாழ்க்கை வீணடிப்பதற்கு நாம் காரணமாக முடியாதெனவும் கூறினார்.
இவ்வருடம் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 97 மாணவர்கள் க.பொ.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களுள் சுமார் 22 ஆயிரம் தொடக்கம் 25 ஆயிரம் வரையிலான மாணவர்களே பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருப்பதனால் ஏனைய பாடநெறிகளை தெரிவு செய்வதற்கும் வெளிநாட்டு கற்கைகளை தொடரவிருக்கும் மாணவர்களுக்கும் பெறுபேறுகள் விரைவில் தேவைபடுகிறது. எனவே வெகுவிரைவில் விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.
விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் இதற்கு ஒத்துழைப்பார்களென்ற நம்பிக்கையில் இன்னும் சில நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணியினை ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதுவரை மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த விடைத்தாள் திருத்தும் பணியினை, துரிதப்படுத்தும் நோக்கில் இம்முறை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கவுள்ளோம். இதற்கென 50 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படும். ஆகக் குறைந்தது ஒரு மாதகாலத்திற்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படுமெனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணியை பகிஷ்கரித்திருந்த ஆசிரிய சங்கங்கள் எமது கோரிக்கையையடுத்து தமது பணியை ஆரம்பிக்க தற்போது தயாராக வுள்ளனர். அது போல, விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் எமது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களென அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம். இவர்களைத் தவிர்த்து விடைத்தாள் திருத்தும் பணியை முன்னெடுப்பது தொடர்பில் நாம் எந்தவொரு திட்டத்தையும் இதுவரையில் யோசனை செய்து பார்க்க வில்லையென்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
அத்துடன், இவ்வருடமே வினாத் தாள்களில் மிகக்குறைந்தளவிலான பிழைகள் காணப்பட்டதாக கூறிய அமைச்சர், மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அவற்றுக்கான புள்ளிகள் பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார, சுமார் 18 இலட்சம் விடைத்தாள்களும் பரீட்சைகள் திணைக்களத்தில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கவனமாக வைக்கப்பட்டிருப்பதனால் மாணவர்கள் தமது விடைத்தாள்களின் நிலை குறித்து அச்சமடைய வேண்டியதில்லையென்றார்.

No comments:

Post a Comment