Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

“பலஸ்தீனர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்காத வரை எந்த ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட மாட்டாது”:முர்சி


Muslim-Brotherhood-Says-Mursi-Wins-Egypt-Vote-270x170
முர்சியின் இந்த அறிவிப்பை அடுத்து 1979 ஆம் ஆண்டில் எகிப்துடன் செய்து கொள்ளப்பட்ட சமாதானஉடன்படிக்கையில் எந்த மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்போவதில்லைஎன்று இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் மாற்றங்களைகொண்டு வருமாறு எகிப்தில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றநிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
‘இஸ்ரேலுடன் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையில் நிரந்தர மாற்றம்கொண்டுவருவதை நாம் நிராகரிப்போம்.இஸ்ரேல் அந்த உடன்படிக்கையில்எந்த மாற்றங்களையும் கொண்டு வர அனுமதிக்காது .’ என்று இஸ்ரேலியவெளிநாட்டமைச்சர் அவிக்டோர் லைபர்மன் இஸ்ரேலிய வானொலிஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்
இதேவேளை அமெரிக்காவில் நடைபெறும் ஐ நா பொதுச்சபை மாநாட்டில்கலந்து கொள்ள அங்கு விஜயம் செய்துள்ள எகிப்தின் ஜனாதிபதி முஹம்மதுமுர்ஷிஇமத்திய கிழக்கில் சர்வாதிகாரிகளை ஆட்சியில் இருக்க ஆதரவுவழங்கும் அமெரிக்க கொள்கையை விமர்சித்தார்
நியூயோர்க் டைம் செய்திதாளுக்கு வழங்கிய பேட்டியில் பலஸ்தீனம்தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மாற வேண்டும் என்று கோரியுள்ளார்
‘பலஸ்தீனர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்காத வரை ஒப்பந்தம்பூரணப்படுத்தப்பட மாட்டாது ‘ என்று அவர் கூறினார்

No comments:

Post a Comment