Search This Blog

Pages

Monday, September 17, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் சுழற்சி முறையில்; முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீத்..?


najeeb-01
கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடனேயே நஜீப் ஏ மஜீத் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக அறிய முடிகின்றது.
முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சுக்கள் இரண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் மற்றைய அமைச்சுக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கும், விமல வீர திஸாநாயக்கவுக்கும் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிக்கும் பிரதி தவிசாளர் பதவி தேசிய காங்கிரசுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்தமொன்று நாளை கைச்சாத்தாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மேலதிக மாவட்டமாக அங்கீகரிப்பதெனவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச மொன்று தனியான பிரதேச சபையாகவும் திருகோணமலை மாவாட்டத்தில் பிரதேச சபையொன்று தனியான  பிரதேச சபையாகவும் அங்கீகரிப்பது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக அந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த ஒப்பந்தம் நாளை காலை (18.9.2012) தயாரிக்கப்பட்டு மாலை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்று மாலை அரசாங்க பிரதி நிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் இது தொடர்பிலான பேச்சவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, மற்றும் சசில் பிறேம் ஜயந்த, டளஸ் அழகப்பெரும, அநுறபிரியதர்சன யாப்பா, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மேற்படி விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட தாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை செவ்வாய்க்கிழமை (18.9.2012) காலை புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகள் மற்றும் அரசாங்க தரப்பு பிரதிகள் சந்திக்கும் சந்திப்பொன்றும் நடை பெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment