Thursday, December 2, 2010
கல்லடி பாலத்துக்கருகில் காணப்பட்ட பாம்புகள் குறித்து விலங்கியல் நிபுணர் விளக்கம்
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்ட ஆயிரக்கணக்கான நீர்பாம்புகள், ‘வாலக்கடியா’ என்ற வகையைச் சேர்ந்தவை என களனி பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய பிரியந்த யாப்பா தெரிவிக்கின்றார்.
இவை கொடிய விஷமுள்ள ஓர் இனம் என அவர் கூறுகின்றார்.
இப்படியான பாம்புகள் வடகிழக்கு சமுத்திரத்தில் அதிகமாக இருப்பதாகவும் நீரியல் மாற்றங்கள் காரணமாக இவை இப்படியாக இடம்பெயர்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார். சுனாமிக்கும் இவ்வகையான பாம்புகளுக்கும் நேரடித் தொடர்புகள் பற்றி இதுவரை எதுவும் ஊர்ஜிதம் செய்யப்படாத போதும் கடற் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது எனவும் அவர் கூறுகின்றார்.
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment