Search This Blog

Pages

Monday, September 17, 2012

இறைத்தூதரை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும்:சவூதி தலைமை முஃப்தி


Grand-Mufti-Sheikh-Abdul-Aziz-Al-Asheikh
முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டமியற்ற வேண்டும் என்று உலக நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தி (மார்க்க தீர்ப்பு வழங்குபவர்) ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது: “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராடுவோர் வன்முறையில் இருந்து விலகவேண்டும். முஸ்லிம்கள் கோபத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது. நிரபராதிகளை கொலைச் செய்வதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்த்து இத்தகைய திரைப்படங்களை தயாரிப்போரின் லட்சியங்களை நிறைவேற்றாமல் இருப்பதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தவேண்டும்.” இவ்வாறு ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இஸ்லாத்தின் புனிதங்களை அவமதிப்பதை சர்வதேச அளவில் தடைச் செய்யவேண்டும் என்று எகிப்தில் உயர் முஸ்லிம் அறிஞரும், அல் அஸ்ஹர் இமாமுமான ஷேக் அஹ்மத் அல் தய்யிப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நிரபராதிகள் தாக்கப்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment