Search This Blog

Pages

Thursday, September 20, 2012

அம்பாறையில் ஹஜ் முகவர் நிலையங்கள் கூடுதல் கட்டணம் அறவிடுகின்றன


hajj
இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வுள்ள ஹஜ்ஜாஜிகளிடமிருந்து அங்கீகரிக்கப் பட்ட முகவர் நிலையங்கள் ரூபா ஒரு இலட்சம் மேலதிக கட்டணம் அறவிடுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
2012 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலை யங்களுக்கு ரூபா 04 இலட்சத்து 25 ஆயிரத்தை உச்சக் கட்டணமாக செலுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் தம்மை பதிவு செய்துள்ள அம்பாறை மாவட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் குறித்த கட்டணத்தை விடவும், ரூபா 01 இலட்சம் அதிகமாக ரூபா 05 இலட்சத்து 25 ஆயிரம் கோருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வர்த்தகர் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தொலைபேசியூடாக பதிலளித்த சிரேஷ்ட அமைச்சர் பெளஸி அங்கீகரிக்கப்பட்ட கட்டணமான ரூபா 04 இலட்சத்து 25 ஆயிரத்தை விடவும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியதாக வர்த்தகர் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள 77 ஹஜ் முகவர் நிலையங்களினூடாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment