Search This Blog

Pages

Tuesday, September 18, 2012

மறுமையை நோக்கி மாற்றங்களும் மாறிக்கொண்டிருக்கும் ஆட்சி பீடங்களும்


egypt_protest
உலகெங்கும் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய குரல்கள் இவ்வளவு காலம் எங்கே போயிருந்தது? பலஸ்தீன் என்ற நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட போது , இலட்சக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்ட போது ,முஸ்லீம்களின் முதலாவது கிப்லா பைதுல் முஹத்தஸ் கைப்பற்ற பட்ட போது , ஈராக் என்ற தேசம் சல்லடையாக்கப்பட்ட போது இஸ்லாமிய நாகரீகத்தின் தொட்டில் பூமி சிதைக்கப்பட் போது , ஆப்கானிஸ்தான் குண்டு மழையால் குளிப்பாட்ட பட்ட போது , எம் பெண்கள் பகிரங்கமாக பலாத்காரம் செய்யப்பட்ட போது , ஈராக்கிலே , பலஸ்தீனத்திலே , ஆப்கானிஸ்தானிலே , சோமாலியாவிலே , காஷமீரிலே , பர்மாவிலே குழந்தைகள் இரத்தக் கண்ணீர் வடித்த போது உறங்கிக் கொண்டிருந்த நாம் இப்போதுதான் விழித்துப் பார்க்கிறோம் மேற்கு எம் சிந்தனைகளை சிறையிலடைத்து வைத்திருக்கின்றது.
உயர்கல்வியென்றும் தொழில்நூட்பம் என்றும் அவர்களின் காலடியில் கிடக்க வைத்திருக்கின்றது இந்த மேற்கு ஆனால் இவர்களுக்கு இந்த தொழில்நூட்பத்தை கற்றுக் கொடுத்தவர்கள் யார் என்பதை மறந்து விட்டார்கள் போலும் இருண்ட காலம் எவ்வாறு தொழில்நூட்பத்தின் உச்சத்தை தொட்டது என்ற வரலாற்றை படித்தால் விளங்கும் முஸ்லீம்களின் ஆட்சிக்காலம் இநத உலகிற்கு விட்டுச்சென்றவை எவை என்று.
கட்டடகலை முதல் நிர்வாக முறைமை நீதியான ஆட்சி, விஞ்ஞான ஆய்வுகள் அருமையான கண்டுபிடிப்புகக்கள் என்று நாகரீகத்தின் உச்சத்தை தொட்டு நின்ற காலம் அது .அப்படியாயின் அவை இப்போது எங்கே? இது அனைவர் மனதிலும் எலும் கேள்விதான் ஆனால் இதற்கு விடைகான இப்போது முஸ்லீம்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டியிருக்கின்றது இன்று நாம் வெறும் முஸ்லீம் பெயர்களை மட்டுமே தாங்கியிருக்கின்றோம்.
சிந்தனையின் வீழ்ச்சியும் மதுவிற்கும் மாதுவிற்கும் அடிமையான எம் பண்புகளும் பணத்திற்காய் பிணம் தின்ன கூட துணிந்த எம் குணமும் எம்மை முடமாக்கிப்போட்டுவிட்டன.
ஆனால் இன்று உலகம் எதோ ஒன்றை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகின்றது உலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் இன்னுமொரு மூலையில் இருக்கும் முஸ்லீமிற்கு வழிக்கின்றது அதாவது ஒரு சகோதரத்துவம் எல்லை தாண்டி பிரதேச வாதங்களை மறந்து ஒற்றுமையின் குரல் ஓங்கி ஓலித்துக்கொண்டிருக்கின்றது . ஆம் இவையனைத்தும் ஒற்றுமையின் கயிற்றை பற்றிப்பிடித்துள்ளன தகுந்த தலைமைக்காய் காத்திருக்கின்றன அதுதான் இமாம் மஹ்தியின் வருகை தஜ்ஜாலை வரவேற்க மேற்கு தயாராகிவிட்டது மஹ்தியை வரவேற்க நாம் தயாரா?
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டவை ஆகவே நடந்தே தீரும்
அல்லாஹ் நாடிய காலம் வரைக்கும் நபித்துவம் உங்கள் மத்தியில் நீடித்திருக்கும். அவன் நாடுகின்ற போது அதனை நீக்கி விடுவான். பின்பு நபித்துவத்தின் வழிமுறையிலான இஸ்லாமிய ஆட்சி தோற்றம் பெறும். விரும்பிய போது அதனையும் அல்லாஹ் இல்லாமல் செய்து விடுவான். பின்பு அநியாயக்கார முடியாச்சி அரசோச்சும். அதனையும் அல்லாஹ் விரும்பிய போது இல்லாமல் செய்து விடுவான். அடுத்துக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்துவர். அதனையும் குறிப்பிட்ட காலத்தின் பின்னால் அல்லாஹ் இல்லாமல் செய்து விடுவான். அதனையடுத்து நபித்துவத்தின் வழிமுறையிலான ஆட்சி ஏற்படுத்தப்படும் எனக் கூறிய நபியவர்கள் பின்னர் மௌனமாக இருந்து விட்டார்கள்.(முஸ்னத் அஹ்மத் 4 : 273)
அநியாயக்கார ஆட்சியில் மக்கள் நீதியின்மையினால் துன்பங்களுக்குள்ளாவார்கள். ஆட்சிபீடம் தனது வேட்கைப்பற்களை மனிதர்கள் மீது செலுத்துவதில் தயங்காது செயற்படும். கொடுங்கோலாட்சி மனிதர்களை அடிமையாக நடாத்தும். இன்று காணப்படும் இராணுவ கொடுங்கோல் ஆட்சியாளர்களை இவ்வகையில் குறிப்பிடலாம்.
ஆனால் நபிகளார் பொன்மொழி உலகில் அநீதி கொடுங்கோல் என்பன நீங்கி விடும். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி மனித உரிமைகளை மதித்து நடக்கக் கூடிய வழிமுறையான கிலாபத் தோற்றம் பெறும் என சுபச் செய்தி கூறுகின்றது.இவையே இன்று நடந்து கொண்டிருப்பது

No comments:

Post a Comment