மனிதர்களுக்கான இறைவனின் இறுதித் தூதரை மிகவும் கோவலமாக சித்தரித்து அமெரிக்காவில் தயாரிக்கப் பட்டுள்ள திரைப்படத்தின் 14 நிமிடங்கள் கொண்ட அறிமுகக் கட்சிகள் ஆபாச அசிங்கம். அருவெருப்பு நிறைந்தவை அறிமுகக் காட்சிகற்கு உலகம் பூராவும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.ஒரு முஸ்லிம் என்ற வகையில் மட்டுமல்லாது நிதான சிந்தனையுள்ள எவரையும் விசனப் படுத்தும். அந்த திரைப்பட அறிமுகக் கட்சிகள் மனிதர்களுக்கான இறைவனின் இறுதித் தூதரை படு மோசமான காமுகராக , கொலைவெறியனாக , பணத்தாசை பிடித்த கொள்ளையனாக சித்தரிக்கிறது .
இது உலகில் உள்ள 170 கோடி முஸ்லிம்களின் உள்ளங்களை மோசமாக பாதித்துள்ளது .உலகில் வன்முறையை தூண்டுகிறது . உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளது . ஆனால் மறு புறத்தில் வன்முறையை தூண்டும். உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் திரைப்படத்தை தடை செய்ய மேற்கு உலகம் மறுத்து வருகிறது .
இஸ்லாமிய வரலாற்றின் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் ( ஸல் ) அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்த எதிரிகளான அபூஜஹ்ல் , உத்பா பின் ரபிஆ , ஷைபா பின் ரபீஆ , வலீத் பின் உத்பா , உமய்யா பின் கலஃப் , உக்பா பின் அபீமுஐத் , உமாரா பின் அல்வலீத் போறவர்கள் கூட அன்று இப்படி மோசமான முறையில் அவரை சித்தரிக்க வில்லை . இன்று பலமான அரசியல் , பொருளாதார , இராணுவ பின்னணி கொண்ட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த திரைப்படம் இறுதித் தூதரை மிகக் கேவலமாக சித்தரிக்கிறது. இதன் மூலம் மேற்கு மீண்டும் மீண்டும் முஸ்லிம் உம்மாவை சீண்டுகிறது. வன்முறைக்கு தூண்டுகிறது . தன்னை தாக்க வருமாறு அழைக்கிறது.
உலகிலேயே தமது மார்க்கத்தை நடைமுறை வாழ்கையில் பின்பற்றும் சமூகங்களில் மிகவும் முன்னணியில் உள்ள சமூகம் முஸ்லிம் சமூகம். இறுதித் தூதரை முஸ்லிம்கள் தமது தாயை விடவும் இ தந்தையை விடவும் தமது உயிரை விடவும் மேலாக மதிக்கிறார்கள். அந்த திரைகாட்சிகளில் இறுதித் தூதர் மிக கேவலமாக சித்தரிக்கப்பட்டது போன்று , எவரேனும் ஒருவனின் தாயை , சகோதரியை அல்லது தந்தையை சித்தரித்தால் அதனால் அந்த நபருக்கு ஏற்படும் கோபத்தை உணர்ச்சியை எவரும் தவறானது என்று கூறமாட்டார்கள். அதை விட பண்மடங்கு உணர்சியைத்தான் அந்த திரைப்படம் முஸ்லிம்களிடம் தூண்டிவிட்டுள்ளது .
ஆனால் உணர்ச்சியை மட்டும் வீதி ஆர்பாட்டங்களில் காட்டும் முஸ்லிம் உம்மா எதையும் செய்யமுடியாது வக்கற்ற நிலையில் உள்ளது. அரசியல் , இராஜதந்திர அழுத்தங்களையோ , இராணுவ அழுத்தங்களையோ மேற்கின் மீது நாம் மேற்கொள்ள வக்கற்றவர்களாக உள்ளோம். எம்மிடம் சர்வதேச அரசியல் தலைமைத்துவம் இல்லை. கிலாபத் இல்லை. முஸ்லிம்களுக்கு சர்வதேச அரசியல் தலைமைத்துவம் இல்லாமையின் வலியை நாம் தொடந்தும் அனுபவித்து வருகிறோம்.
குறித்த திரைபடத்தை தயாரித்தவர்கள் , அதற்கு உதவியவர்கள் , அவர்களை பாதுகாக்க முற்படுபவர்கள் , கருவிகள் சுமந்தவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் . அந்த அளவு தூரம் திரைகாட்சிகள் மனிதரின் உச்ச உணர்சிகளுடன் விளையாடுகிறது. தாக்குதல் அது சரி பிழை என்பதற்கு அப்பால் அதன் விளைவை அவர்கள் எதார்த்தமாக அனுபவிக்க நேரிடும் என்பது வேறுவிடையம் .
மறுபக்கத்தில் நாம் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள் தொடர்பில் இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் நாம் சிந்தனையுடன் நிதானமாக செயல்படவேண்டும் . நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் மனிதர்கள் என்ற வகையில் உணர்ச்சியுடன் தொடர்பானவை அதை எவரும் தடுக்க முடியாது . ஆனால் நாம் இங்கு இலங்கையில் தலைநகரிலும் கிராமங்களிலும் செய்யும் ஹர்த்தால்இ ஆர்ப்ப்பாட்டம் என்பன குறி தவறிவிடக் கூடாது , குறிதவறும்போது எமது சமூகத்துக்கும் , எமது ஈமானிய கொள்கைக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அது இஸ்லாமிய அழைப்பின் குரலை நளினப் படுத்தும்.
இன்று சமூக வலைத்தளங்களிலும் செய்தித்தளங்களிலும் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் அவ்வது திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்று முஹம்மது(ஸல்) அவர்களுக்கு எதிரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரபல்யப்படுத்தபவர்களாக நாமே இருந்து கொண்டிருக்கிறோம் இன்று ஒரு பத்திரிகை வெளியிட்டதாக சொல்லி அனைத்து பத்திரிகைகளும் அதனை வெளியிடுகின்றன ஏன் நாமும் கூட அதனை செய்கிறோம்?
கடந்த திங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஹர்த்தால் , ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வருகின்றது. அவற்றில் சில ஆர்பாட்டங்கள் குறிதவறிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. திரைப்படத்துடன் நேரடியாக தொடர்பு படாதவர்களை பொதுவிலும் , குறித்தும் குறிவைப்பது. பிழையான புரிதலை ஏற்படுத்தி பாதகமான விளைவுகளை தந்துவிடும். நடத்தப்படும் ஆர்பாட்டங்களில் பொதுவில் கிறிஸ்தவ பாதிரிகள் அனைவரையும் குறிக்கும் விதமாக கோஷம் எழுப்புதல் , வாசகங்களை எழுதி பிடித்தல் , போன்றவற்றை தவிர்த்து கொள்ளவேண்டும் .
இன்று இலங்கையில் முஸ்லிம்களையும் , பௌத்தர்களையும் மோதலுக்கு தூண்ட முயற்சிக்கும் சக்திகளில் சில கிறிஸ்தவ சக்திகளுக்கு நேரடித் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உண்டு. சிங்கள கிஸ்தவர்களுக்கு எதிரான சில பெளத்த சிங்கள சக்திகளின் எதிர்ப்பை முஸ்லிம்கள் பக்கம் திருப்பி விடும் திட்டமிட்ட வேலை இடம்பெற்று வருவதற்குரிய வாய்ப்புகளும் அதிகம் உண்டு. அவற்றை எமது இந்த சிந்திக்காத நடவடிக்கைகள் அவற்றை தூண்டிவிடும். அது மட்டுமின்றி இவ்வாறான செயல்கள் சாதாரன நல்ல உள்ளம் கொண்ட மாற்று மதத்த வர்களையும் விசனம் அடையச் செய்யும்.
அப்படியான சில தீயசக்திகளுக்கு தீனி போடுவதுவதாக எமது ஆர்பாட்டங்கள் இடம்பெறக் கூடாது . அதேவேளை பொது நலனுக்கு எதிராகவும் , இடையூறாகவும் இருக்கும் விதமாகவும் இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்வோம். நாம் சாதாரணமாக உணர்சிகளுக்கு உட்படும் மனிதர்கள் என்பதற்கு அப்பால்இ நாம் பக்குவமான முஸ்லிம்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்இ நிரந்தரமான தீர்வுகளை நோக்கி நகர்வோம் . உலகளாவிய இஸ்லாமிய தலைமைத்துவம் நோக்கி பயணிப்போம் .
புத்துணர்வு கொண்டு பதிய உலகிற்குல் வருவோம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அனாவசியமாக செலவழிக்கும் பணத்தை அறிவிற்கும் ஆராய்சியிற்கும் செலவழிப்போம் புறக்கணிப்புகளுக்கு பதிலாக புதுக்கண்டு பிடிப்புக்களை நிகழ்த்துவோம் மண்டியிட்டு நிற்காமல் மாற்று வழிகளை கண்டுபிடிப்போம் அறியாமைக்கு எதிராய் போர் தொடுத்து அறிவியலை அறிமுகப்படத்திய எம் அறிஞர்களை மீண்டும் உருவாக்குவோம்
No comments:
Post a Comment