தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், முன்னால் அமைச்சருமான அமீர் அலிக்கு தேசியப் பட்டியலில் இடம்கொடுத்து பிரதியமைச்சர் பதவியொன்றினை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் தங்களது கட்சி சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு பிரேரித்த அமீர் அலிக்கு அம்முயற்சி கைகூடாத நிலையில், பிரதியமைச்சர் பதவியொன்றினை பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்கலாம் என தெரியவருகிறது. முன்னதாக தனக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைப்பதை உறுதியாக கூறியிருந்த அமீர் அலிக்கு, கமலா ரணத்துங்கவின் ராஜினாமாவானது குறித்த பதவி தொடர்பில் மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.
No comments:
Post a Comment