Search This Blog

Pages

Tuesday, September 18, 2012

இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நஜீப் ஏ. மஜீத் அவர்களுக்கு JABS BLOG சார்பாக வாழ்த்துக்கள்


8d385e10586aebc49edd93110a5187aa_XL
மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வருட காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்

நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில்இடம் பெற்ற பேச்சுவார்ததையிஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக நேற்று பதவியேற்றுள்ள நஜீப் அப்துல் மஜீத், 1957 ஆம் ஆண்டு கிண்ணியாவில் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் பின்னர் யாழ். சென் ஜோன் அகடமி, கம்பளை ஸாஹிரா என்பவற்றில் கற்றார். மூதூர் மஜீத் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் 1987ல் சுட்டுக் கொல்லப்பட்ட தையடுத்து இவர் தந்தை வழியில் அரசியலில் குதித்தார்.
1989 ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட போதும் அவரால் பாரா ளுமன்றம் தெரிவாக முடிய வில்லை. 1993 இல் நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர் கிண்ணியா பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
பாடசா லைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக திறமை காட்டிய இவர் மத் திய மாகாண பரிதிவட்ட சம்பியனாகவும் விளங்கினார். மெய்வல்லுநர் போட்டி களிலும் றகர் போட்டிகளிலும் கூட திறமை காட்டியது குறிப்பிடத்தக்கது. 1994 பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸினூடாக போட்டியிட்டு முதற் தடவையாக நஜீப் ஏ மஜீத் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியில்போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் தெரிவானார்.
இவர் 2000முதல் 2001 வரை தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராக பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர் திருமலை மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகவும் பின்னர் கூட்டுறவு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் பிரதி மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
மூதூர் சுதந்திரக்கட்சி அமைப்பாள ராகவும் திருமலை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளராகவும் செயற்பட்டு வரும் இவர் கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச மக்களின் நலனுக்காக பெரும் பங்காற்றியுள்ளார்.
கிண்ணியா பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தவும் புதிதாக முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்கவும் பங்காற்றியுள்ள இவர், கிண்ணியா பாலம் நிர்மாணிக் கப்படவும் முன்னின்று செயற்பட்டு ள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
கிண்ணியாவைத் தனியான கல்வி வலயமாக மாற்றவும் இவர் பாடுபட்டதோடு கிண்ணியா பிரதேச ஆஸ்பத்திரியை தளவைத்தியசாலையாக மாற்றுவதற்கும் முன்நின்று உழைத்தார்.
2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்ட நஜீப் அப்துல் மஜீத் கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்று மாகாண சபைக்கு தெரிவானார்.
இலங்கை முஸ்லிம் சமூகம் முதலாவது முஸ்லிம் முதலமைச்சரின் சேவையை எதிர்பாத்து நிற்கின்றது. அவரின் எதிர்கால சேவைக்கு எமது வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment