கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்ததத்தை தொடர்ந்தே இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த 8ஆம் திகதி நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை.
இதன்காரணமாக அம்மாவட்டத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை தோன்றியது.
கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4ஆசனங்களையும் பெற்றிருந்தன.
இந்நிலையில் கூட்டாச்சி என்ற நிலையில் கிழக்கு மாகாணசபையின் நிலை அமைந்துவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தெசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை உத்தியக பூர்வமாக இறுதிவரை தெரிவிக்காத நிலையில் கிழக்கின் புதிய முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment