ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள சர்வதேச படைகளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல்மண்ட் மாகாணத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான வீடியோவுக்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடியோ தொடர்பில் பல நாடுகளில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
நான்கு மணி நேரங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் துப்பாக்கிகள் மோர்டார் குண்டுகள் ரொக்கெட் எறிகுண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாலிபான்கள் கேம்ப் பாஸ்ச்சன் முகாமின் பாதுகாப்பு எல்லையைக் கடந்து ஊடுருவினர்.
இத்தாக்குதலில் அமெரிக்க மரைன்ஸ் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் தரப்பில் குறைந்தது பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலாளிகள் அனைவரையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் தொடருவதாக நேட்டோ கூட்டணிப் படைகள் கூறுகின்றன.
தற்சமயம் இந்த முகாமில்தான் பிரிட்டிஷ் இராணுவத்தில் கேப்டன் நிலையிலுள்ள இளவரசர் ஹாரியும் இருந்தார். அவருக்கு இத்தாக்குதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேவேளை ஆப்கான் லோகர் மாகாணத்தில் அமெரிக்க படையினராலும், ஹமீட் கர்சாயின் ஆப்கான் இராணுவத்தினராலும் தலிபான் போராளிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக மிக மோசமான பரஸ்பர சண்டைகள் நடைபெற்றுள்ளன. எவ்வளவு தான் நவீன ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆப்கான் போராளிகளின் தற்காப்பு சமரணியை உடைத்து கொண்டு சென்று அவர்களை நிர்மூலம் செய்ய முடியாமல் அமெரிக்க கூட்டு இராணுவம் திணிறி வருகிறது.
இந்த நிலையில் முஜாஹிதீன்கள் தங்களிற்கான விநியாகத்திற்கான மார்க்கங்களை திறந்துள்ளனர். தலிபான்களை சுற்றி வளைத்த அமெரிக்க கூட்டு படையினரின் சுற்றிவளைப்பில் பலவீனமான அனைத்து வழிகளையும் போராளிகள் உடைத்து தங்களிற்கும் லோகரின் பிற பிரதேச உதவி அணி போராளிகளிற்குமான தொடர்புகளை பேணிக்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் போராடிய பல போராளிகள் பின்னிழுக்கப்பட்டு புதிய தாக்குதல் அணி களமிறக்கப்பட்டது.
ஷஹாதத் தாக்குதல் அணியை சார்ந்த பல போராளிகள் புதிய அணியில் காணப்பட்டனர். இவர்களது பலமான துணிகர தாக்குதலில் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான இரண்டு Chinook துருப்புகாவி ரக ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 21 அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலின் பின்னர் முஜாஹித்கள் ரோல் எடுத்துக்கொண்டிருந்த சமயம் அமெரிக்க ஆளில்லா ட்ரோன் விமானத்தின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக இரண்டு முஜாஹித்கள் ஸ்தலத்தில் பலியாகினர்.
அமெரிக்க மற்றும் அவர்களது தோழமை படையினரிற்கு எதிரான தலிபான்களின் தாக்குதலில் இது ஒரு மைல் கல் என சிலாகிக்கப்படுகிறது. அமெரிக்க படை சுற்றி வளைக்கும் போதெல்லாம் பின்வாங்கி சிதறி ஓடும் அதே போராளிகள் இரண்டு நாள் முற்றுகையை வெற்றிகரமாக எதிர்கொண்டு, பதில் தாக்குதல் நடாத்தி எதிரி அணியை மூன்று கூறுகளாக பிளந்து தமக்கான விநியோக மார்க்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். உண்மையிலேயே ஆப்கானிய போராட்டம் ஆயுத மற்றும் தாக்குதல் பரிணாமங்களில் பாரிய வளற்ச்சியை கண்டுள்ளது.
புதிய தாக்குதல் அணிகள் அடுத்தடுத்து இரண்டு Chinook உலங்கு வானுர்திகளை தாக்கி வீழ்த்தியமை ஒரு பெரிய விடயமாகும். அவர்களின் தாக்குதல் பலத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் ஏவுகணை வளங்கள் அவர்களை வந்தடைந்துள்ளன. ஆப்கானிய விடுதலை போராட்டம் மேலும் வருங்காலங்களில் கூட்டுப்படைகளுக்கு மேலும் சவாலாக அமையப்போகின்றதும் என்பதில் சந்தேகமில்லை..
No comments:
Post a Comment