மாலி அரசு, உடனடியாக தமது நாட்டுக்கு வெளிநாட்டு படைகளை அனுப்பி, தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்டுத் தருமாறு கோரியுள்ளது.பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Laurent Fabius இதை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரெஞ்ச் டி.வி. சேனல் TF1, சற்றுமுன் செய்தி வெளியிட்டது.
பிரான்ஸ் தமது ராணுவத்தை மாலிக்கு அனுப்புமா என்ற கேள்விக்கு, “அது தொடர்பாக ஆராயப்படும்” என்ற பதில் மட்டுமே பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரால் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மாலியில் ஏற்பட்ட ராணுவ புரட்சியில், நாட்டின் ஜனாதிபதியின் பதவி பறிக்கப்பட்டது. அதையடுத்து, துவாரெக் தீவிரவாத அமைப்பு, ராணுவத்தை விரட்டிவிட்டு, நாட்டின் மூன்றில் இரு பகுதியை கைப்பற்றி, தம்வசம் கொண்டுவந்தது.
இப்போது, துவாரெக் தீவிரவாத அமைப்பிடம் இருந்து அந்த பகுதிகளை, அல்-காய்தா ஆதரவு இயக்கம் ஒன்று கைப்பற்றியுள்ளது. அதுதான் சிக்கல்.
No comments:
Post a Comment